Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, June 08, 2015

குரூப்-2 தேர்வுக்கு இன்று இலவச பயிற்சி


 கரூரில், குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது.
இதுகுறித்து, கலெக்டர் ஜெயந்தி தெரிவித்ததாவது:டி.என்.பி.எஸ்.ஸி., மூலம் குரூப்-2 போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அரசு சார்பில், பல்துறை வல்லுனர்களால் இலவச பயற்சி அளிக்கப்பட உள்ளது.அதன்படி, இன்று, கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மேலும் விவரங்களுக்கு, இன்று சான்றிதழுதடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம்.