ஒரு பெண் ஊழியருக்கு முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்க வேண்டும். பள்ளி ஆசிரியையிடம் சம்பளப் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஆர்.எஸ்.,மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியை பிரியதர்ஷினி தாக்கல் செய்த மனு:எனது முதல் பிரசவத்திற்காக 2011 ல் 180 நாட்கள் மகப்பேறு விடுப்பில் சென்றேன். இரட்டைக் குழந்தை பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக 2014 அக்.,12 முதல் 179 நாட்கள் மகப்பேறு விடுப்பில் சென்றேன். மீண்டும் 2015-, ஏப்.,10 ல் பணியில் சேர்ந்தேன்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்'உங்களுக்கு ஏற்கனவே இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பில் சென்றதை அனுமதிக்க முடியாது' என்றார்.
விடுப்பில் சென்ற நாட்களை சம்பள இழப்பு காலமாகக் கருதி 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் சம்பளப் பிடித்தம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் நலன்) உத்தரவிட்டார். 1993 ல் அரசின் உத்தரவுப்படி பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகளுக்கு கீழ் இருந்தால் அடுத்த பிரசவத்திற்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கலாம். சம்பளப் பிடித்தம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் ஏ.திருமூர்த்தி ஆஜரானார்.நீதிபதி: மனுதாரருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளதால் இரண்டாவது பிரசவத்திற்காக சென்ற விடுப்பு காலத்திற்கு சம்பளப் பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இரட்டைக் குழந்தையா? அல்லது இரண்டு பிரசவமா? என்பதே இவ்
வழக்கின் முக்கிய அம்சம்.
மனுதாரருக்கு முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதை காரணமாகக் கொண்டு அடுத்த பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்க முடியாது என்பது ஏற்புடையதல்ல. ஒரு பிரசவத்தில் ஒரு பெண் எத்தனை குழந்தைகள் பெற்றுள்ளார் என்பதை மட்டும் கணக்கில் கொண்டு முடிவு செய்வது சரியல்ல.மகப்பேறு விடுப்பு பெண்களின் உடல்நலம் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது. முதலில் இரட்டைக் குழந்தை பிறந்தாலும் இரண்டாவது பிரசவத்திற்கு விடுப்பு அனுமதிக்க வேண்டும். சம்பளப் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஜூன் 23 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.