Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, June 13, 2015

அண்ணாமலைப் பல்கலை: சேர்க்கைக்கான விண்ணப்ப தேதி ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிப்பு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் மற்றும் பல்மருத்துவம் (M.B,B.S., B.D.S), பிஎஸ்சி விவசாயம்., பிஎஸ்சி தோட்டக்கலை (B.sc Agri and B.sc Horticulture), பி.ஃபார்ம் (B.Pharm), பி.பி.டி (B.P.T) மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் (5 Year Integrated Courses) ஆகிய படிப்புகளுக்கான 20115-16 ஆண்டிற்கான அனுமதி சேர்க்கை கையேடு மற்றும் விண்ணப்ப விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப ஜூன் 22-ம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுளளது என பதிவாளர் ஜெ.வசந்தகுமார் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜூன் 12-ம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அண்ணாமலைநகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைதூரக்கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் பெறறுக் கொள்ளலாம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு ரூ.1500 செலுத்தியும், பிஸ்சி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கு ரூ.800 செலுத்தியும், எஸ்சி., எஸ்டி பிரிவினர் ரூ.400 செலுத்தியும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 22-ம் தேதியாகும்.
மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு தமிழகஅரசு இடஒதுக்கீடு விதிப்பட்டியும், மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும். சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அவர்கள் பிளஸ்டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு (Counciling) தேதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் பார்க்கவும். மேலும் au_regr@ymail.com என்ற மெயில் முகவரியையும் மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதி ஜூன் 12-ம் தேதியுடன் முடிவுற்றது. பொறியியல் புலத்தில் 10 படிப்புகளுக்கான அனுமதி சேர்க்கை தனி கலந்தாய்வு மூலம் நடைபெறவுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.