வறுமை நிலையிலும் படித்து, மகனுடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய தாய், அதிக மதிப்பெண் பெற்று தேறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தருண் கோகோய் தலைமையிலான ஆட்சி அசாம் மாநிலத்தில் நடக்கிறது. கிழக்கு அசாம் மாநிலத்தின் திப்ரூகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நயன்மோனி பேஜ்பரூவா, 3௭. இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மூத்த மகன் அங்கூர் பேஜ்பரூவா, 18, அருகில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்துக்கொண்டே, தந்தைக்கு உதவியாக காய்கறி விற்பனை செய்து வருகிறார். படிப்பில் ஆர்வமுள்ள நயன்மோனி, 12 கி.மீ., தொலைவில் உள்ள பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்.அதிகாலை, 4:00 மணிக்கு எழும் நயன்மோனி, வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவார். இரவில் வீட்டு வேலைகளை முடித்து, அனைவரும் துாங்கிய பின், தன் பாடங்களை படிப்பார். மழைக் காலத்தில் பள்ளி செல்வது என்பது மிகவும் கடினம்.
இந்நிலையில், நடந்து முடிந்த பிளஸ் 2 பொது தேர்வை, நயன்மோனியும், அவரது மகன் அங்கூரும் எழுதினர்.சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில், நயன்மோனி, 69.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பிலும், அவரது மகன், மூன்றாம் வகுப்பிலும் தேர்ச்சி
அடைந்தனர்.பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நயன்மோனி, சிறு வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டதாக, பள்ளி முதல்வர் சோன்தோரா கோகோய் கூறியுள்ளார்.