Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, June 21, 2015

ஆசிரியர் டிப்ளமோ பயிற்சி ஜூலை 1ல் 'கவுன்சிலிங்'


'ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, 'ஆன்லைன்' மூலம் நடக்கும்' என, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான எஸ்.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, எஸ்.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு:வரும், 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கான, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், பட்டயப் படிப்பில் சேர, ஜூலை, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, ஒற்றை சாளர முறையில், 'ஆன்லைன்' மூலம், 'கவுன்சிலிங்' நடக்கும்.தற்போது, விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது.வரும், 22ம் தேதி முதல், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, அழைப்பு கடிதம், தபாலில் அனுப்பப்படும்.கவுன்சிலிங்கில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகியவற்றின் அசல் சான்றிதழ், சாதி சான்றிதழ்; மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசு, சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோர், சிறப்பு பிரிவில், ஒதுக்கீடு பெற, அதற்கான சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.