Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, June 02, 2015

படித்தேன்,ரசித்'தேன்' - 14


11 வயதில் 3 பட்டங்கள்: இந்திய சிறுவன் சாதனை


 அமெரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த, தனிஷ்க் ஆபிரகாம் என்ற, 11 வயது சிறுவன், மூன்று பட்டங்கள் பெற்று, இந்தாண்டின் மிகக்குறைந்த வயது பட்டதாரி என்ற பெருமையை பெற்றுள்ளான்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின், சாக்ரமென்டோ நகரில் வசிக்கும் ஆபிரகாமுக்கு, பிறவியிலேயே வயதுக்கு மீறிய அறிவாற்றல் இருந்துள்ளது.


வியக்க வைத்தனர்:

அதனால், நான்கு வயதிலேயே அதிக அறிவாற்றல் கொண்டோருக்கான, 'மென்சா - ஐக்யூ' என்ற அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தான். அவனின், தங்கை தாராவும், அதே வயதில் அந்த அமைப்பில் இடம்பெற்றாள். இதையடுத்து, மிகக்குறைந்த வயதில் அந்த அமைப்பில் உறுப்பினரானோர் என்ற சிறப்பை இருவரும் பெற்றனர். இந்த அமைப்பு நடத்தும் தேர்வில், 98 சதவீதம் எடுத்தால் மட்டுமே, உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர். ஆனால், ஆபிரகாமும், தாராவும், 99 சதவீதம் எடுத்து, அந்த அமைப்பை ஆச்சரியப்பட வைத்தனர். ஐந்து வயதில், ஸ்டான்போர்டு பல்கலையின் கணித பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற ஆபிரகாம், ஆறு வயதில், ஆன்லைன் மூலம் உயர்நிலைக் கல்வி பயின்றான். ஏழு வயதில், அமெரிக்கன் ரிவர் கல்லூரியின் பட்டப்படிப்பில் சேர்ந்த ஆபிரகாம், கணிதம், அறிவியல், பிறமொழியியல் ஆகியவற்றில் மூன்று துணை பட்டங்களுடன் பட்டதாரியாக தேர்வு பெற்றுள்ளான்.


குறைந்த வயதில்...:

''இந்த வயதில் இப்படியொரு சாதனையை யாரும் செய்ததில்லை என, கருதுகிறேன்; இதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் தற்போது எங்களிடம் இல்லை என்ற போதிலும், இந்த ஆண்டின் மிகக்குறைந்த வயது பட்டதாரி என்ற சிறப்பு ஆபிரகாமுக்கு கிடைத்துள்ளது,'' என, அமெரிக்கன் ரிவர் கல்லூரி செய்தி தொடர்பாளர் ஸ்காட் குரோ தெரிவித்துள்ளார்.


பாராட்டு கடிதம்:

அமெரிக்காவில் ஆபிரகாம், தாராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிபர் ஒபாமா, கடந்தாண்டு ஆபிரகாமின் திறமைகளை பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், 'எனக்கு அமெரிக்க அதிபராக ஆசை' என, ஆபிரகாம் தெரிவித்திருந்தான். இது போதாதா ஊடகங்களுக்கு... '2040ல், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க அதிபர் ஆபிரகாம்' என, அவை இப்போதே எழுதத் துவங்கிவிட்டன.
                                                                                 

                                                                            THIS INFORMATION SHARED BY:
                                                                                    P.KARTHIKEYAN, PGT,
                                                                                 GHSS,ESANATHAM,KARUR DT.

இப்பகுதியில் உங்களின் படைப்புகள் இடம் பெறச் செய்ய அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.

(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)