Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 31, 2015

இசையால் வசமாகும் இயற்கை விவசாயம்


திண்டுக்கல் அருகே விவசாயி ஒருவர் இசை மூலம் இயற்கை விவசாயம் மேற்கொள்கிறார். மதுரையை சேர்ந்தவர் அ.ஜானகிராமன். சிறுமலை அடிவார பகுதியில் 22 ஏக்கரில் திராட்சை, மா, பப்பாளி, தென்னை சாகுபடி செய்கிறார். பயிர்களுக்கு ஜீவாமிர்தம், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துகிறார். 

பூச்சித் தாக்குதலை தடுக்க அக்னி அஸ்திரத்தையும், பூக்கள் கொட்டாமல் இருக்க தேங்காய்பால், புளித்த மோரையும் தெளிக்கிறார். மேலும் பயிர்கள் இசையை கேட்பதற்காக தோட்டத்தில் உயரமான கம்பத்தில் குழாய் பொருத்தியுள்ளார்.இந்த குழாய் மூலம் தினமும் காலை 6 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 6:30 மணி வரையும் இசை ஒலிபரப்பாகிறது. காலையில் விநாயகர் பாடல் இசையுடன் துவங்கி முருகன், சுப்ரபாதம், சித்தர்கள், சங்கராபரணம் ராகம் வரை இசைக்கப்படுகிறது.

விவசாயி ஜானகிராமன் கூறுகையில், “இசைக்கு மயங்காத உயிரினம் இல்லை. பயிர்களும் உயிரினம் என்பதால் அவற்றுக்கும் உணர்வு உண்டு. இசை கேட்டு வளரும் தாவரங்கள் எப்போது புத்துணர்வுடன் இருக்கும். வளர்ச்சியும் நன்றாக இருக்கும்,” என்றார்.