Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, May 17, 2015

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப் பணியிடங்கள்

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி
நிலையத்தில் காலியாக உள்ள கம்பியாள் பிரிவு பணிமனை உதவியாளர்(ஒயர்மேன்)
பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித்தகுதியாக
10ம்வகுப்புடன் என்.டி.சி., என்.ஏ.சி., தொழில்நுட்பத் தகுதி
முடித்தவர்கள், முன் அனுபவம் பெற்றவர்கள் இனம், பொதுப்பிரிவு முன்னுரிமை
உடையோர் ஆவர்.

2013 ஜூலை 1ல் முற்பட்ட வகுப்பினர் 18 முதல் 30
வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
18 முதல் 32க்குள்ளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் 18
முதல் 35 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.தகுதியுடையவர்கள் தங்களது
பெயர், கல்வித்தகுதி, தொழில் நுட்பக்கல்வி, சாதி, முன் அனுபவம்,
முன்னுரிமை, முகவரி, தொலைபேசி எண் விபரங்களை உரிய சான்றுகளுடன்(ஜெராக்ஸ்)
விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் பரிசீலனை
செய்யப்பட்டு தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்விற்கு
அழைக்கப்படுவர்.விண்ணப்பங்களை மே 25 மாலை 5 மணிக்குள் முதல்வர், அரசினர்
தொழிற்பயிற்சி நிலையம், சூலக்கரை ரோடு, விருதுநகர் 626 003 என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேல் விபரங்களுக்கு 04562 252 382 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.