Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 30, 2015

வருத்தப்பட எதுவுமில்லை


 ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது. எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர். ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார். துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி. குருவின் சீடர்களின் ஒருவன் துணிந்து குருவிடம் கேட்டான், "குருவே, நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது, நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே ஏன் இப்படி செய்கிறீர்கள்" என்று கேட்டான். அதற்கு பதில் சொன்ன ஞானி, "பிறப்பில் சிரிக்கவோ. இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது? பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. என் மனைவிக்கு முன்பு உடலோ, உயிரோ இல்லை. பிறகு உயிரும் உடலும் வந்தன. இப்போது இரண்டும் போய்விட்டன. இடையில் வந்தவை இடையில் போயின. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று கேட்டார்.