அன்னையர் தினம்
தாய்க்கு மட்டுமல்ல, தாய்மைக்கே தாலாட்டுப் பாட என் நெஞ்சம் தகதகக்கிறது.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க தாய்மை !!!
கரு உருவான நாள் முதலாய் அதனைக் கண்ணின் மணியாய் காத்து வளர்க்கின்ற
தாய்மை வாழவேண்டும் பல்லாயிரமாண்டு!!!
தன் உருவம் கொண்டு வந்த மகனோ, மகளோ ஓராயிரம் பிழை செய்தாலும்
உயிர்கொடுத்துப் பொறுத்துப் போகிற உயர்ந்தவளே தாய்!!!
பதவி பல பெற்றாலும் எப்போதும் கனிந்திருக்கும் பாசத்திற்கு உரியவளே தாய்!!
இந்த இயந்திர யுகத்திலும் கூட எத்தனையோ பணிகளுக்கு நடுவிலும் தன் பிள்ளை
என்று வரும்போது இதயம் தொலைக்காத இயல்பினளே தாய்!!!
தாய்மை பற்றிக் கூற நினைக்கும்போது ஒரு கதை மனதில் நிழலாடுகிறது...
ஒரு காட்டில் காட்டுத்தீ பரவி கானகமே அழிந்துவிடும் தருவாயில்
இருந்தது..தீயை அணைக்க மக்கள் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டனர். தீயை
அணைத்துவிட்ட பிறகு காட்டினுள் சென்று பார்த்தனர்,பல உயிரினங்கள் இறந்து
கிடந்தன.அவற்றுள் ஒரு நெருப்புக்கோழியும் உட்கார்ந்த நிலையிலேயே
இறந்திருந்ததைக் கண்ட ஒருவர் அதனைக் குச்சியால் தட்டிவிட்டார். அப்போது
அவரது விழிகள் வியப்பால் விரிந்தன..என்ன ஒரு ஆச்சரியம்!!!
அந்தக் கோழிக்குள் அதன் 5 குஞ்சுகள் உயிருடன் இருந்தன..
தன்னுயிரைத் தந்து பிள்ளைகளைக் காப்பாற்ற எந்தப் பள்ளியில் சொல்லிக்
கொடுத்தார்கள் அந்தக் கோழிக்கு!!!
ஆறறிவு இல்லாத அந்தச் சிறிய உயிரினங்களுக்கே இத்தனை தாய்மை உணர்வு
இருக்கும்போது ,ஆறறிவு உள்ள மனிதருக்குள் எத்தனை அதீதமாக தாய்மை உணர்வு
மிகுந்திருக்கும் என்பதை இதைவிட எப்படி எடுத்துக்காட்ட முடியும்??
போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த அன்னையர் தினத்தில் இப்போது
உள்ள இளம் தாய்மார்களுக்கு ஓர் சிறிய வேண்டுகோள்!!!
இன்றைய போட்டி மிகுந்த உலகில் தன் பிள்ளை சிறந்தவராக வரவேண்டும் என்று
எண்ணுவது தாய்மையின் இயல்புதான்..அதற்காக உங்கள் குழந்தையின்
குழந்தைத்தனத்தை இழக்கவைத்து விட்டு மிகச் சிறந்தவர்களாக்குவதற்கான
ஓட்டப்பந்தயத்தில் பிள்ளைக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அவர்களையும்
இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறீர்களே!!!ஒரு நிமிடம் நின்று
இளைப்பாருங்கள்!!
இப்போதே முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டிருக்கிறது, இதில் வருங்காலம் பெற்றோருக்கு எப்படி
இருக்குமோ என்ற அச்சம் எனக்குள் அதிகமாக உள்ளது,
நிச்சயம் உங்கள் பிள்ளை நிறைய பணம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள்,அதில்
எள்ளளவும் ஐயமில்லை! ஆனால்....????
சமூக அக்கறையுடனோ, மனிதநேயத்துடனோ இன்ன பிற அடிப்படை குணநலன்களுடனோ
இருப்பார்களா என்பது காலத்திற்கே வெளிச்சம்!
ஏனென்றால் விதைப்பதைத் தானே விளைச்சலாகப் பெறமுடியும்.
மதிப்பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையை உங்கள் பிள்ளையின் மனதிற்குக்
கொடுங்கள்..அவர்வர்க்குத் தேவையான துறைகளை அவர்களே
தேர்ந்தெடுக்கட்டும்,அருகில் இருந்து தேவையான உதவிகளைச் செய்யுங்கள்.
பணம் சம்பாதிக்கும் துறையில் மட்டுமே எதிர்காலம் என்ற உங்களது உணர்வைக்
குழந்தையின் மூளைக்குள் திணித்து அவர்களது சுயத்தை அழித்துவிடாதீர்கள்..
" படிப்பு முக்கியம், அறிவை வளர்த்துக்கொள், அதனைக்கொண்டு உலகை
எதிர்கொள்,நல் ஒழுக்கத்துடன் சிறந்த மனிதனாக மனிதநேயத்துடன் வாழ்"!- என்ற
எண்ணங்களை ஊற்றி வளர்த்தால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை அனைவரும்
காணலாம்.
எனவே அன்பையும் பண்பையும் இப்போது முதலீடு செய்யுங்கள்..அதிக வட்டியுடன்
திரும்ப உங்களுக்கே கிடைக்கும்...
நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!!!
வாழ்க தாய்மை!!!
வெல்க பல்லாண்டு!!!

அதிகரித்துக்கொண்டிருக்கிறது,

- கட்டுரை ஆசிரியர்
:
பொற்கொடி செல்வராஜ்.
# சென்னை தூர்தர்ஷனின்
பொதிகை தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர்.
# கோவை ரெயின்போ FMல்
அறிவிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
# சமூக, பெண்ணிய சிந்தனையும்
கொண்ட நல்ல பேச்சாளர்..
Email: porkodi.rainbow@gmail.com