தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.
ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் மீதான தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பை கேட்ட அ.தி.மு.க,. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
1991-96 ல் முதல்வராக இருந்த ஜெ., 66. 5 கோடி சொத்து சேர்த்ததாக ஜெ., மற்றும் இவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக சிறப்பு கோர்ட்
குமாரசாமி தீர்ப்பளித்தார். 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி கோர்ட் அறையில் வாசித்தார்.
இவர் அளித்த தீர்ப்பில் ; ஜெ., அப்பீலை ஏற்று கொண்டார். ஜெ., 4 ஆண்டு சிறை தண்டனை ரத்ததானது. ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலையாயினர். அவர்களுக்கு சிறப்பு கோர்ட் விதித்த அபராதமும் ரத்தானது.