Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, May 16, 2015

படித்தேன்,ரசித்'தேன்' - 4 (உங்களின் பங்களிப்பில் )


ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து


“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”


 - பகிர்ந்தவர் 
 சு.செந்தில்செல்வி
முகஆ( பொருளியல்)
அரசு மேல் நிலைப் பள்ளி,
 தாழையூத்து்,பழனி்
திண்டுக்கல் மாவட்டம்.


இப்பகுதியி
ல்
உங்களின் படைப்புகள் இடம் பெறச் செய்ய அவற்றை
99431 49788 என்கிற Whats app எண்ணிற்கோ அல்லது tnpgtakarurdt@gmail.com
என்கிற மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள்.

(குறிப்பு: படைப்பில் உங்களின் பெயர்,பள்ளி முகவரி தெளிவாக குறிப்பிடவும்)