Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, May 04, 2015

லேப் டெக்னீசியன், ஓட்டுநர் பணியிடத்திற்கு மே., 12 இல் பதிவு மூப்புபட்டியலை சரி பார்ப்பு

Tமருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆய்வக
நுட்பனர்(லேப் டெக்னிஷியன்) 876 காலியிடங்களுக்கும், ஓட்டுநர் 580
காலியிடங்களுக்கு மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதன் பதிவு மூப்பு பட்டியலை அந்தந்த மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே., 12 இல் சரி பார்த்து கொள்ளலாம் என
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவித்துள்ளதாக சிவகங்கை மாவட்ட
செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதில்
கூறியிருப்பதாவது: 876 ஆய்வக நுட்பனர் பணியிடத்திற்கு பள்ளி மேனிலை
கல்வியியல்(எச்எஸ்சி) தேர்ச்சி பெற்றிருப்பதோடு தமிழக அரசின் மருத்துவ
கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில் ஓராண்டு
சான்றிதழ் பெற்று பதிவு(இணையதளத்தில் உள்ள பட்டியல்) செய்திருக்க
வேண்டும்.580 ஓட்டுநர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன்
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று பதிவு செய்திருக்கவேண்டும். 01.07.2015
தேதியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதிற்குள்ளும்,
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தோருக்கு 32
வயதிற்குள்ளும், பகிரங்கபோட்டியாளர் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வுக்கான பொது விதி பொருந்தாது.மேற்கண்ட காலியிடங்களுக்கு
தேர்வு செய்யப்பட்டவர்களின் உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வேலைவாய்ப்புத்
துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள்
பதிவு மூப்பு பரிந்துரையில் பெயர் விடுபட்டிருந்தாலோ, தங்களது பதிவு எண்,
பெயர், பிறந்த தேதி, முகவரி, முன்னுரிமை விவரங்களில் தவறு இருந்தாலோ
மே.12 இல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று
சரிசெய்து கொள்ளலாம்.
Quick Reply