Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, May 22, 2015

10ம் வகுப்பு தேர்வு: மாநில அளவில் 3 இடங்களைப் பிடித்து கரூர் பள்ளி மாணவிகள் அபாரம்


        10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது. 10ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கரூர் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி கே.தேவதாநிலானியும், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமியை சேர்ந்த தனபிரியா ஆகிய இருவரும் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றனர்.
          இதே போல் கரூர் பரணி பார்க் பள்ளியில் பயின்ற திவ்யா, நிவேதா, சுபஸ்ரீ ஆகிய மூன்று மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றனர். மேலும் இதே பள்ளியை சார்ந்த ரசிகா, மதுமித்ரா, ரேஷ்மா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தனர். கரூரில் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாவட்டத்தில் மாநில அளவில் முதல் இடத்தை இரண்டு தனியார் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநில அளவில் 499 மார்க் பெற்று 41 பேரும், 498 மார்க் பெற்று இரண்டாமிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 192 பேரும், மூன்றாவது இடம் 497 மதிப்பெண்கள் பெற்று 540 பேர் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.