Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 01, 2017

தேர்வுப்பணியில் 100% நேர்மை..!

நண்பர்களே! கடந்த 2006ம் ஆண்டிலிருந்து கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு ஆண்டும் தேர்வுப்பணிகளை கூர்ந்து கவனித்தும் வந்துள்ளேன்.2007ம் ஆண்டில் கரூர் நகராட்சிப்பள்ளியில் அறைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய போது அங்கே துறை அலுவலராய்ப் பணிபுரிந்த ஒரு உலகமகா யோக்கியவான் பலரது சீனியாரிட்டியை காலில் போட்டு மிதித்து முன்னேறிய ஆள்.அடுத்தாண்டு 2008ல் அதே பள்ளியில் அக்டோபர்மாதம் அறைக்கண்காணிப்பாளராய்ப் பணியாற்றியுள்ளேன்.

அந்த ஆண்டு 2006ல் பணியேற்ற ஓர்நபர் பறக்கும் படையில் ஆய்விற்கு வந்தார்.அதன் பின் ஒவ்வோராண்டும் விதிமீறல்கள் கொடிகட்டிப் பறந்தன.*2009ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக சீனியாரிட்டிப்படி டியூட்டி வழங்குங்கள் என வெள்ளைக்காரர்களிடம் காங்கிரஸ்காரர்கள் கொடுத்தது போல் மனுக் கொடுத்து கொடுத்து நொந்து போனோம்.எல்லாவற்றிற்கும் காரணம் தெரிந்தோ தெரியாமலோ நம் ஆசிரியர்கள் கண்ணைமூடிக்கொண்டு ஓர் சுயநலக்கும்பலை ஆதரித்ததுதான். 2013ல் சிஎஸ்ஐ பள்ளியில் எனது பணியில் பத்தாவது ஆண்டில் அறைக்கண்காணிப்பாளராக பணியாற்றினேன்.அங்கே 2012ல் பணியில் சேர்ந்த ஓர்நபர் ஸ்குவாடு டியூட்டியில் வந்தார்.இதற்கு மேலும் புலம்புவது இயலாமை என அறிந்து அறிவாயுதம் RTI2005ஐ கையீல் எடுத்தேன்.டியூட்டி போட்ட கிளர்க் என் வீட்டிற்கு ஆள் அனுப்பி சமாதானம் பேசினான்.வந்த 3பேரும் ஆசிரியர்கள்.அதில்ஒருவர் மிகமிக வேண்டப்பட்டவர்.இதனிடையே பள்ளியை அம்போவென விட்டுவிட்டு PMGHSS பள்ளியில் போய் உட்கார்ந்து கொண்டு பரிட்சை டியூட்டியை தனது விருப்பப்படி போட்ட ஓர் தஆ ஐ அங்கே இருந்து கிளப்பினோம்.2014,2015ல் சற்றே பித்தலாட்டம் நேரானது.2016ல் ரெசிடென்சியல் முகவரி வைத்து டியூட்டி போட மனு கொடுத்துப் பேசினோம்.சிஇஓ. சொன்ன காரணத்தையும் வாட்ஸ்அப்ல் நேர்மையாய் வெளியிட்டோம். அதிலும் நடந்த விதிமீறலுக்காக போலீஸ்நிலையத்திற்கு 3தினங்கள் போனோம்.

இவ்வாண்டு 2017ல் டியூட்டி வருகிறது.இதற்கு முன் துறை அலுவலராய் பணியாற்றிய நண்பர்கள் ஸ்குவாடிலும்,ஸ்குவாடில் இருந்தோர் அறைக்கண்காணிப்பாளராகவும் மாறியுள்ளனர்.சந்தேகம் இருந்தால் நீங்களே கூட்டம் நடக்கும் போது நினைவு படுத்திப் பாருங்கள்.புரியும். *நான் அறிந்த வரையில் எவன் தன்னுடைய பொருள் இது இல்லை எனத் தெரிந்தவுடன் திரும்பத் தருகிறானோ!அல்லது பிறரது வாய்ப்பை நாம் பெற்றுவிட்டோம் என திரும்ப ஒப்படைக்கின்றானோ அதற்குப்பெயர்தான் நேர்மை!.அந்த நேர்மை உள்ளவர்கள் என்றும் நல்வாழ்வு பெறுவர்.ஆயிரம்பேர் கொண்ட சங்கமாயினும் படித்தோர்க்கு அழகு நேர்மை! கல்வியின் அழகு மாண்பு நேர்மை!ஆசிரியருக்கு அழகு நேர்மை!.நேர்மையின் வழியிலே என்றும் TNPGTA நடக்கும்.🙏 8ஆண்டுகளுக்குப் பின் 95%நேர்மை தழைத்துள்ளது.மீதிக் குறைப்பாடு காலத்தினால் சரிசெய்யப்படும்.இக்குறையை நீக்கிட ஒத்துழைப்புத் தந்த உறுப்பினர் நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவிக்கின்றேன்.----

இன்று ஓர் அயல்மாவட்டத்திலிருந்து கரூர்க்கு பணிமாறுதலில் வந்த ஓர் இளம் ஆசிரியரின் கண்ணோட்டத்தில் மகிழ்ச்சியாக கூறுகின்றார். கரூர்மாவட்டத்தில் இவ்வாண்டு தேர்வுப்பணிநியமனம் மிக நேர்மையாக நடந்துள்ளது!.
- கோ.இளங்கோ ,கரூர் TNPGTA