Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 01, 2017

இதனைத்தானே எதிர்பார்த்தோம்

கரூர் மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வுப் பணியில்,  பணி ஒதுக்கீடு என்பது கடந்த காலங்களைக் காட்டிலும் மிக நேர்மையாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஒரு சில குறைபாடுகள் சிலரின் ஜால்ரா வேலைகளுக்கு சன்மானம் வழங்கியது போல இருக்கிறது. அதுவும் வருங்காலங்களில் சரி செய்யப்படுமென நம்புவோம்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை கரூர் மாவட்டத்தில் தேர்வுப்பணி ஒதுக்கீடு என்பது மிகவும் கேலிக்கூத்தாக இருந்தது. அதனை சரிசெய்ய நமது TNPGTA அமைப்பு மேற்கொண்ட தொடர் போராட்டத்தின் வெற்றி தான் இந்தாண்டு முறையான தேர்வுப்பணி ஒதுக்கீடு.

கடந்தாண்டே தேர்வுப்பணி ஒதுக்கீட்டிற்கு ஆசிரியர்களின் இருப்பிட முகவரியை எடுத்துக்கொள்ள வலியுறுத்தினோம். ஆனால் அப்போது முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கரூரில் வசிப்பதால் தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு தேர்வுப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்களென காரணம் கூறி பள்ளிக்கூட முகவரி அடிப்படையில் தேர்வுப்பணியை ஒதுக்கீடு செய்தார்.

அதிகப்படியான ஆசிரியர்களுக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து தேர்வுப்பணி மேற்கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டது. இக்குறைபாட்டை சரிசெய்து இருப்பிட அருகாமையில் தேர்வுப்பணியை மாற்றித்தர வேண்டுகோள் கடிதம்கொடுத்த ஆசிரியர்களுக்கு மாற்றம் செய்து தறாமல் அலுவல பணியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீட்டுக்கு மிக அருகிலே தேர்வுப்பணியை வேண்டுகோள் கடிதம் கொடுக்காமலே மாற்றிக்கொடுத்தார்கள்.

இதனை கண்டித்து வாட்ஸ்அப்பில் செய்திகளை வெளியிட்டோம். இறுதியாக அலுவலக பணியாளர்களின் (ஆபீசர்ஸ்) தூண்டுதலின் பேரில் கரூர் மாவட்ட TNPGTA தலைவர் திரு.இளங்கோ, மாவட்ட இணைச்செயலர் திரு.மகேந்திரன், பட்டதாரி சங்கத்தை சேர்ந்த திரு.ஜெகதீசன் ஆகியோர் மீது காவல்துறையில் கொடுக்கப்பட்ட பொய் புகாரினையும் பட்டதாரி மற்றும் ஆசிரிய பயிற்றுநர் நண்பர்களுடன் இணைந்து தவிடுபொடியாக்கி வெற்றி கண்டோம்.

மேற்கண்ட குறைபாடு இந்தாண்டும் தொடரக்கூடாதென CEOவிடம் தொடர்ந்து வலியுறுத்தியதால் இந்தாண்டு 95% அளவிற்கு தேர்வுப்பணி ஒதுக்கீடு நேர்மையாக நடைபெற்றுள்ளது.

இதற்கு முழுக்காரணம் கரூர் மாவட்ட TNPGTA நிர்வாகிகள் மற்றும் பட்டதாரி ஆசிரிய நண்பர்களின் நேர்மையான அணுகுமுறையே ஆகும்.

உரிய மருத்துவ காரணங்களுக்காக 3 முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வுப்பணியிலிருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்தோம் அதனடிப்படையில் அவர்களுக்கு மட்டும் தேர்வுப்பணி ஒதுக்கப்படவில்லை. மற்றபடி நமதமைப்பினரின் தலையீடோ, நிர்வாகிகளுக்கு சலுகை கேட்டதோ துளி அளவிற்குக்கூட இல்லை என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

கரூர் மாவட்ட கல்வித்துறையில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்திட போராடும் TNPGTA நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நேர்மையே மாற்றத்திற்கு அடிப்படை என்பதை உணர்ந்து செயல்படுவோம் நண்பர்களே.

                        TNPGTA கரூர்.