Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, December 13, 2016

ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு இன்று முதல் சலுகை

 ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு 0.75% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

0.75% தள்ளுபடி :


கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் பெறுபவர்களுக்கு 0.75 சதவீதம் விலை தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இச்சலுகை இன்று (டிச.,13) முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, பொதுத்துறை பெட்ரோல் பங்குகளில் இச்சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மொபைல் வேலெட், பிரீபெய்டு லாயல்டி கார்டுகளிலும் இச்சலுகை வழங்கப்படவுள்ளது.