ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச்செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
93 உறுப்பினர்கள் முன்னிலையில் ஐ.நா. சாசனத்தின் நகல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 9வது பொதுச் செயலாளராக கட்டரஸிற்கு, பான் கிமூன் பதவியேற்பு செய்து வைத்தார். ஆன்டோனியோ கட்டரஸ் ஐ.நா.,வின் 9 வது பொதுச்செயலர் ஆவார்.