- ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி ரீதியிலான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நிதியுதவி அளிப்பதற்கு "உயர்கல்வி நிதியுதவி அமைப்பு' என்ற புதிய அமைப்பை மத்திய அரசு விரைவில் அமைக்கவுள்ளது.இதுதொடர்பான திட்டத்தை மத்திய அமைச்சரவைக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியிருந்தது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.கூட்டத்துக்குப் பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதிதாக ஏற்படுத்தப்படும் அமைப்பானது, பொதுத் துறை வங்கி அல்லது அரசால் நிர்வகிக்கப்படும் வங்கிசாராத நிதியுதவி அளிக்கும் அமைப்பு போன்று செயல்படும். ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உலகத் தரத்தில் ஆய்வுக் கூடங்கள் ஏற்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி அளிக்கவிருக்கும் இந்த அமைப்பு, பங்குகளை வெளியிட்டு ரூ.20 ஆயிரம் கோடி மூலதனம் திரட்டும் என்றார் ஜாவடேகர்.வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம்: இதனிடையே, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரூ.3,600 கோடி மதிப்பில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வித் திறன் மேம்படுத்துதல் திட்டத்தின் 3-ஆவது பகுதியில் எந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதையடுத்து, வருமானம் குறைந்த 7 மாநிலங்கள் (பிகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம்), மலைப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் 3 மாநிலங்கள் (ஹிமாசலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட்), 8 வடகிழக்கு மாநிலங்கள் (அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா) மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகள் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தின்கீழ் முக்கியத்துவம் கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலை மத்திய மனிதவள மேம்www.tnpgtakarurdt.in