Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, August 20, 2016

இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சி காலக்கெடு நீடிப்பு


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வுக்கு இலவச
பயிற்சி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,
வரும், 24ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
ஏழை மற்றும் பின்தங்கிய மகளிர், ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிக்கான
தேர்வுகளில் தேர்ச்சி பெற, சென்னை ராணிமேரி
கல்லுாரி மற்றும் மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு
மகளிர் கலைக் கல்லுாரியில்,
இலவச பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
இம்மையங்களில், நடப்பாண்டு பயிற்சி பெற
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, ஆக., 8 என,
அறிவிக்கப்பட்டிருந்தது; தற்போது, 24ம் தேதி
வரை நீடிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் விபரம்
அறிய, 044 - 2844 4995; 0452 - 2534 988 ஆகிய
டெலிபோன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.