Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, August 21, 2016

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் உர்ஜித் பட்டேல் !


ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித்
பட்டேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உள்ள
ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வருகிற செப்.,4-
ம் தேதியுடன் நிறைவடைகிறது. ரகுராம்
ராஜனும் மீண்டும் கவர்னராக பணியாற்ற
விரும்பவில்லை என கூறினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும்
நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் இது
குறித்து ஆலோசனை நடத்தினர். அவர்களது
ஆலோசனையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள்
துணை கவர்னர் சுபிர் கோகர்ன், தற்போதைய
துணை கவர்னர் உர்ஜித் படேல், தலைமை
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
ஆகியோரில் ஒருவருக்கு, அதிக வாய்ப்பு
உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய
துணை கவர்னர் உர்ஜித் படேல் புதிய கவர்னராக
நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.