மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட
பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான,
'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு
உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக்
குறிப்பு:
இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்;
தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர்
உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு,
இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர்,
'ஹால்டிக்கெட்டை'www.
tangedcodirectrecruitment.inஎன்ற
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 -
2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு
அதில் கூறப்பட்டு உள்ளது.