Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, April 14, 2016

நாட்டில் தூய்மையான ரயில்வே மண்டலம் :தெற்கு ரயில்வே முதலிடம்

சென்னை: நாட்டில் தூய்மையான ரயில்வே
மண்டலமாக தெற்கு ரயில்வே 2வது முறையாக
முதலிடம் பிடித்துள்ளது. டெல்லியில் நடந்த 61வது
ரயில்வே வார விழாவில் 2015-2016 ஆண்டுகளில்
சுமார் 20 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ரயில்ேவ
மண்டலங்களுக்கும், கோட்டங்களுக்கும் சிறப்பாக
பணியாற்றிய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும்
விருதுகள், கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன. தூய்மை பிரிவில் தெற்கு ரயில்வே
முதலிடம் பெற்றதற்காக விருது பெற்றுள்ளது.
தொடர்ந்து 2வது ஆண்டாக தூய்மை பிரிவில் தெற்கு
ரயில்வே முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
விற்பனை மேலாண்மை பிரிவிலும் இந்த ஆண்டு
முதலிடம் பெற்றதற்காக தெற்குரயில்வேக்கு விருது
வழங்கப்ட்டுள்ளது.