சி.எஸ்.ஐ.,
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின்
நிர்வாகத்தின் கீழ் 8 சிறுவர்
மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, ஆதரவற்ற
குழந்தைகளுக்கும், விதவைகளின் மறு
வாழ்விற்கும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து
நிதியுதவி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் செயற்குழு
உறுப்பினர் ராஜேஷ் ரவிசுந்தர் தெரிவித்ததாவது: ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும்,
விதவைகள் மறுவாழ்விற்கும் திட்டங்கள்
தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது. இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு 38 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இதில் ஐந்து
ஏக்கர் நிலம் வாங்கி அதில் விதவைகள் ஆடு,மாடுகள்
மேய்த்து அதில் வரும் வருமானத்தில் பயன் பெறும் படி இந்த நிதி வழங்கப்பட்டது.
இதன் திட்ட இயக்குனராக ஏ.எம்.விஜயராஜா என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர்
நாசரேத் அருகில் உள்ள நெய்விளை கிராமத்தில் இமானுவேல் சிறுவர் மையத்தில் இத்திட்டம்
செயல்படுத்த அனுமதிக்கப்பட்டது. திட்ட இயக்குனர் தனது மனைவி பியூலா ரத்தினம் பெயரில்
உள்ள 63 சென்ட் நிலத்தையும்,மற்றவர்கள் நிலத்தையும் காட்டி 4 ஏக்கர் நிலம் உள்ளதாக காட்டி போலியான ஒப்பந்த பத்திரம்
போட்டுள்ளார்.
இந்த இடத்திற்கு வாடகையாக 40 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு ஓலையால் ஆன
கூரை அமைப்பதற்கு பதிலாக
10.83 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட்
கட்டடம், சுற்றுச்சுவர்
அமைத்து தென்னங்கன்றுகளையும் வைத்து தனது இடத்தை மேம்படுத்தியுள்ளார். இதே போல்
அனைத்து சிறுவர்
மையங்களிலும் ஊழல் நடந்துள்ளது.
புகார்:
திருமண்டல செயற்குழு கூட்டத்தில் விஜயராஜா, அவரது மனைவி பியூலா ரத்தினம்
மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த
புகாரை மிஷினரி விசாரித்து 13 லட்சம் ரூபாய்
மோசடி செய்ததாகவும், அதனை திருப்பி
செலுத்த உத்தரவிட்டது. இது வரை பணத்தை செலுத்தாமல்.
தாங்கள்
வகித்து வந்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தவறான செய்தியை பரப்பி வருகிறார். இவர்
மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். எடுக்காத பட்சத்தில் வெளிநாட்டு நிதியுதவியை
மோசடி செய்ததாக எஸ்,பி., யிடம் புகார் கொடுக்கப்படவுள்ளது என, அவர் தெரிவித்தார். அவருடன் மற்றொரு செயற்குழு
உறுப்பினர் ரட்சகர் உடனிருந்தார்.