Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Sunday, April 10, 2016

இதுதான் கரூர் மாவட்ட TNPGTA...!!

www.tnpgtakarurdt.blogspot.in
சங்கமே இல்லாமல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களை ஏமாற்றியே தன்னிகரில்லாத் தலைவன் என கிணற்றுத்தவளைகளை கூவச்செய்துவரும் முனைவர் மணிவாசகன் அவர்களே, 
நீங்கள் கூறும் பிதற்றல்களை உங்கள் அடிமைகள் வேண்டுமானால் நம்பலாம், ஆனால் உங்களது ஏமாற்று வேலைகளையெல்லாம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆதரப்பூர்வமாக வாட்ஸ்அப்பில் வெளியிட்டு உங்களுடைய அமைப்பை செயல்பட முடியாமல் முடங்கச் செய்தது கரூர் மாவட்ட TNPGTA என்பதை அனைத்து மாவட்ட முதுகலை ஆசிரியர்களும் அறிவர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட +2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் உங்களது  சங்கம் சார்பில் வழங்கிய நோட்டீசில் வழக்கம்போல ஏமாற்று வாசகங்களை அள்ளிவீசி துதிபாடும் செயலை செய்துள்ளீர்கள்!
மேலும் குமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் TNPGTA அமைப்பினர் முதன்மை கல்வி அலுவலருக்கு ஜால்ரா போடுவதாக சொல்லியுள்ளீர்கள்.
இதனாலையே கரூரில் இந்த நோட்டீஸை கொடுக்க உங்களது  சங்கத்தினர் தயங்கி வருகின்றனர். ஏனென்றால் கரூர் மாவட்டத்தில் உங்கள் சங்கத்தினருக்கு பெயரே ஜால்ரா சங்கம் என்பது நீங்கள் அறிந்ததுதானே?
முதன்மை கல்வி அலுவலக ஊழியர்களை தலைவா,! அண்ணா,!மாமா! என சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மாற்றுப்பணியை வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்தாமல் இருப்பது எந்த அமைப்பினர் என்ற புள்ளிவிவரத்தை நாங்கள் அளித்தால் உங்கள் சங்க நிர்வாகிகள் பெரும்பான்மையோர் அதில் இடம்பெறுவர்.
முதன்மைக்கல்வி அலுவலர்களை தாஜா செய்துகொண்டு உங்கள் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கே செய்முறைத்தேர்வு மற்றும் பொதுத்தேர்வுப் பணியினை தொடர்ந்து பெற்றுவருவது உங்களுக்கு தெரியும் தானே?
உங்கள் சங்க மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்ட மகளிரணி நிர்வாகி பணிபுரியும் பள்ளிகளில் இரவு 9 மணிவரை ஆண்டாய்வு நடந்தபோது எதுவும் பேசாதவர்கள் தானே? இவர்கள் எப்படி மற்ற ஆசிரியர்களின் பிரச்சனைகளை தீர்க்கப்போகிறார்கள்?
இரவு நேரங்களில் ஆண்டாய்வு பணியினை நீடிப்பு செய்யக்கூடாதென நாங்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே ஆண்டாய்வு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்தது.
கரூர் மாவட்டத்தில் முன் அரையாண்டுத்தேர்வு வினாத்தாளில் தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் விளம்பரம் வந்தபோது அதனை கடுமையாக கண்டித்து வாட்ஸ்அப் மற்றும் செய்தித்தாளில் செய்திகளை வெளியிட்டு முதன்மைக்கல்வி அலுவலரால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடக்காதென உறுதியளிக்கச் செய்தோம்.
இப்பிரச்சனையில் உங்கள் ஏமாற்றுச் சங்கத்தினர் வாயே திறக்கவில்லையே ஏன்? தனியார் பள்ளிகளில் பங்குதாரராகவும், தனியார் பள்ளிகளுக்கு ஏஜென்டாகவும் செயல்படுவதும் அவர்கள் தானே?
+2 தேர்வுப்பணி ஒதுக்கீட்டில்  முறைகேட்டை கண்டித்து வாட்ஸ்அப்பில் செய்திகளை வெளியிட்டு காவல்நிலையம்வரை சென்று இப்பிரச்சனைகளை தீர்க்கப் போராடுபவர்கள் கரூர் மாவட்ட TNPGTA நிர்வாகிகள் என்பதை உங்கள் சங்கத்தினர் சொல்லவில்லையா?
TNPGTA கரூர் மாவட்ட நிர்வாகிகள் தானாகவே முன்வந்து ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு மாற்றுப்பணி ஆணையைப் கேட்டுப்பெற்று பாடம் நடத்தி வருவதும், தனியார் பள்ளிகளில் மிக நேர்மையாக செய்முறைத்தேர்வுப் பணியை எமது நிர்வாகிகள் மேற்கொண்டதும்  உங்களுக்கு தெரியாதா?
உங்களைப் போலவே உங்கள் சங்க நிர்வாகிகளும் அட்டைக்கத்திகளாகவே இருக்கிறார்களே எப்படி? கரூரில் முதன்மை கல்வி அலுவலர் மீளாய்வு கூட்டம் நடத்தினால் புறக்கணிப்பு செய்வதாக சொல்லி மற்ற ஆசிரியர்களையும் வலுக்கட்டாயமாக வழியை மறித்து கலாட்டா செய்வார்கள், ஆனால் பள்ளிக்கூடத்தில் PTA தலைவர் மீளாய்வு கூட்டம் நடத்தினால் அதை புறக்கணிக்க முடிவதில்லையே ஏன்? இணை இயக்குனர் மீளாய்வு கூட்டம் நடத்தியபோது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் போனது ஏன்?
கடந்தாண்டு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் வழங்கிய நோட்டீசில் 18,000 உறுப்பினர்களை கொண்ட சங்கமென போட்டு ஏமாற்றினிர்களே.! ஒரு நபருக்கு மாநில பங்குத்தொகை ரூபாய் 100 எனில் 18,00,000 ரூபாய் ஆண்டுதோறும் சந்தா வசூலாகும்போது வழக்கு நிதியென ஒவ்வொருவரிடமும் 1,000 ரூபாயை வசூல்செய்து வேதகிரி பேப்பர் லிமிடெட் EB டிபார்ட்மெண்ட் மீது தொடர்ந்த வழக்கு எண்ணை போட்டு பொய்யாக வழக்கு போட்டதாக நீங்கள்  ஏமாற்றினிர்களே !அதை வாட்ஸ்அப்பில் போட்டோமே அது நினைவிருக்கிறதா அல்லது மீண்டும் வெளியிடவா?
முனைவர் பட்டம் வாங்கியதற்கு இனோவா காரை பரிசளிக்க வழக்கு நிதியென வசூலித்த பணத்தை ஆட்டையைப்போட்டு ஏற்கனவே மொட்டையடித்ததைப்போல புதுவிதமாக ஏமாற்றியதையும் வெளியிட்டது கரூர் மாவட்ட TNPGTA என்பதையும் நினைவுகூர்கிறோம்.
எதற்கெடுத்தாலும் அதைச்செய்தோம்! இதைச்செய்தோம்! என பிதற்றுவதை நிறுத்திவிட்டு இதற்கு ஆதாரமிருந்தால் அதை வெளியிடுங்களேன் பார்ப்போம்!. எந்தெந்த அரசாணை அல்லது செயல்முறைகள் நீங்கள் வைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு வெளியிட்டது என்பதை வெளியிடுங்கள் அப்போது தெரிந்துவிடுமே உங்களின் வாய்ச்சொல்லின் இலட்சணம்.
சங்கப்பதிவைக்கூட புதுப்பிக்கத்தெரியாதவர்கள் தான் எல்லா ஆணிகளையும் புடுங்குனார்களாம்? சங்கப்பதிவாளரிடம் ஏன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்டினிர்கள்? அங்கே உங்கள் வாய்ஜாலம் பழிக்காதோ?
பள்ளிக்கூடம் செல்லாமலும், தேர்வுப்பணி, விடைத்தாள் மதிப்பீடு பணியென எதற்கும் செல்லாமல் முதுகலை ஆசிரியரென உழைக்காமல் ஊதியம் பெறும் உங்கள் சங்க நிர்வாகிகள்  போன்றவர்களலல்ல கரூர் மாவட்ட TNPGTA நிர்வாகிகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இனிவரும் காலங்களில் கரூர் மாவட்ட TNPGTAவின் செயல்பாடு உங்களை தினமும் திணறடிக்ககச்செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் முனைவர். மணிவாசகன் அவர்களே!!

www.tnpgtakarurdt.blogspot.in