Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, April 02, 2016

ஏப்ரல் இறுதியில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி


ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில்
பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று
நிறைவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இம்மாத
கடைசி வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் பணி
முடிவடையும் என்று தெரிகிறது. இந்த பணிகள்
முடிவடைந்த பின்னர், ஆசிரியர்களுக்கு தேர்தல்
பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம்
திட்டமிட்டுள்ளது. 4ல் முதல் கட்ட பயிற்சி வகுப்பும்,
மே 7ல் 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், மே 12ல் 3ம் கட்ட
பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளது. மே 15ல்
நடைபெற உள்ள இறுதிக்கட்ட பயிற்சியில்,
ஆசிரியர்களுக்கான தேர்தல் பணி ஆணைகள்
வழங்கப்பட உள்ளன.