Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, April 02, 2016

குழந்தை தொழிலாளர் விவகாரம்; மனித உரிமை ஆணையம் 6 மாநில அரசுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: குழந்தை தொழிலாளர் மறுவாழ்வு
விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்டதற்காக, 6
மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்
நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2013 மார்ச் முதல்
2014 ஜூலை வரை டெல்லி, ராஜஸ்தான், பீகார்,
மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேச
மாநிலங்களில் கொத்தடிமைகளாக இருந்த 740
குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில்
விடுவிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால்தான் அரசின்
உதவித்தொகையை பெற முடியும். ஆனால், 610
சிறுவர்கள் மீட்கப்பட்ட பீகாரில் அம்மாநில அரசு 456
பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கியுள்ளது.
ராஜஸ்தானில் இதுவரை யாருக்கும் சான்றிதழ்
வழங்கப்படவில்லை. மொத்தம் 284 சிறுவர்கள் அரசின்
சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது
தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, 8
வாரத்தில் அறிக்கை தர 6 மாநில அரசுகளுக்கும்
தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி
உள்ளது.