Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, April 02, 2016

பிளஸ்–2 தேர்வுகள் முடிந்தன; இயற்பியல் தேர்வு கடினம்

்மதுரை,
பிளஸ்–2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது.
கடைசித் தேர்வாக இயற்பியல் மற்றும் பொருளியல்
பாடங்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. இதில் இயற்பியல்
தேர்வை எழுத மதுரை மாவட்டத்தில் 23,458
மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில்
103 பேர் தேர்வு எழுத வரவில்லை. 173 தனித்தேர்வர்களில்
25 பேர் தேர்வு எழுத வரவில்லை.பொருளியல் தேர்வுக்கு
11,074 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் 102 பேர் தேர்வெழுத வரவில்லை. 976
தனித்தேர்வர்களில் 142 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பொருளியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தததாக
மாணவ,மாணவிகள் தெரிவித்தனர். ஆனால் இயற்பியல்
தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக
தெரிகிறது. இதனால் பதில் எழுத மாணவ–மாணவிகள்
சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.