Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, March 30, 2016

புதுச்சேரி-காரைக்கால் பள்ளிகளில் பாடவேளைகள் மாற்றம்

புதுவை, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளில்
பாடவேளைகளை மாற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் குமார்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நகர்ப்புற பள்ளிகள்
புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின்
பாடவேளைகளில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்
குனர் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான
சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு
அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி நகர்ப்புறங்களில் செயல்படும் பள்ளிகளில் காலை
9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். பிற்பகல் 12-25 வரை
வகுப்புகள் நடை பெறும். 12-25 முதல் 2 மணிவரை
உணவு இடைவேளையாகும். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு
வகுப்புகள் தொடங்கி 4-15 மணி வரை வகுப்புகள்
நடைபெறும்.
கிராமப்புறம்
ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் காலை 9-30
மணிக்கு வகுப்புகள் தொடங்கும். 12-55 மணிவரை
தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும். பிற்பகல் 12-55 முதல்
2 மணிவரை உணவு இடை வேளையாகும். அதன்பின் 2
மணிக்கு தொடங்கும் வகுப்புகள் மாலை 4-15 மணி வரை
நடைபெறும்.
இந்த சுற்றறிக்கையின் விவரங்களை சம்பந்தப்பட்ட
பள்ளிகளுக்கு தெரிவித்து அதன்படி செயல்படுவதை
உறுதி செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இந்த கால
அட்டவணை வருகிற கல்வியாண்டு (2016-17) முதல்
அமலுக்கு வருகிறது.