சென்னை,
கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதல்-
அமைச்சர் ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி
வருமாறு:-
‘‘தாங்கள் மிக அதிகமான பாடல்களைப் பாடியதற் கென
கின்னஸ் சாதனை படைத்துள்ளீர்கள் என்ற செய்தியை
அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இந்த
சாதனைக்கு எனது பாராட்டுதல்களை அன்போடு
தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் சிறிய வயதி லிருந்தே இசை மீது மிகுந்த ஆர்வம்
கொண்டு, தங்களது கடின உழைப்பால் தமிழ், தெலுங்கு,
மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில்
பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளீர்கள். திரைப் படங்
களில் எனக்கு மட்டுமின்றி எனது தாயாருக்கும் தாங்கள்
பின்னணி பாடல்களைப் பாடியுள்ளீர்கள் என்பதை இந்த
நேரத்தில் பெருமையுடன் நான் நினைவு கூருகிறேன். பல
திரைப்படங்கள் தங்களின் இனிய குரல் வளத்தினாலேயே
பெருமை அடைந்தன என்றால் அது மிகையில்லை.
17,695 திரைப்பட பாடல் களைப் பாடி கின்னஸ்
சாதனையாளராக புகழ் பெற்றுள்ள தாங்கள் இன்னும் பல
ஆயிரம் பாடல்களைப் பாடி தமிழ் இசைக்கும், இசைத்
துறைக்கும் சேவை யாற்ற வேண்டுமென நான்
இறைவனை வேண்டு கிறேன்.’’இவ்வாறு அதில் கூறியுள்