்தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள்
மீறப்பட்டால், புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்
அறிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழகத் தலைமைத்
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
கூறியுள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது,
மாவட்ட தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற
வேண்டிய விதிமுறைகள் பற்றிய பயிற்சி,
சென்னை எழும்பூரில் நடந்து வருகிறது.
இப்பயிற்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்
போது ஏற்படும் சட்ட சிக்கல்கள் பற்றி
எடுத்துரைக்கப்பட்டது. அப்போது
செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத்
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்ததாவது,
“தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள்
மீறப்பட்டால், புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்
அறிவிக்கப்பட்டுள்ளது; தேர்தல் விதிமீறல்
குறித்து, புகார் தெரிவிக்க ஆண்டிராய்ட்
குறுஞ்செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்
பட்டுள்ளது.”
விதிமீறல் தொடர்பாக இதுவரை 300
புகார்கள் வந்துள்ளதாகவும், அவற்றின் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்
அவர் கூறினார்.
ஒரு மாவட்டத்திலிருந்து இரண்டு தேர்தல்
அலுவலர்கள் என்ற கணக்கில் மொத்தம் 64
தேர்தல் அலுவலர்கள் பயிற்சியில