Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, March 08, 2016

உள்ளாடைகளை துவைக்காததால் ஆத்திரம்: அலுவலக உதவியாளருக்கு மெமோ கொடுத்த நீதிபதி

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சார்பு
நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவல
உதவியாளர், நீதிபதி வீட்டில் உள்ளாடைகள்
உள்ளிட்ட துணிகளை துவைக்காததால்,
மெமோ கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி
செல்வம், தனது வீட்டு வேலைகளை
செய்யுமாறு, அலுவலக உதவியாளராக
பணிபுரியும் வசந்தியை அறிவுறுத்தியதாக
தெரிகிறது. அப்போது நீதிபதியின் மனைவி
உமா, தாங்கள் அணியும் உள்ளாடைகள்
உள்ளிட்ட துணிகளை துவைக்குமாறு
கூறியபோது, அதற்கு வசந்தி
மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த மாதம் ஒன்றாம்
தேதியிட்ட மெமோ ஒன்றை நீதிபதி செல்வம்
வழங்கியுள்ளார்.
அதில், துவைக்க போடும் துணிகளை சரிவர
துவைக்காமல் இருப்பதோடு, குறிப்பாக
உள்ளே அணியும் துணிகளை
அருவருப்படைந்து தூக்கி வீசி எறிந்து
விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி
கேட்டபோது, துணைவியாரை எதிர்த்துப்
பேசியதாகவும், அதற்காக ஏன் ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க கூடாது எனவும்,
நீதிபதியின் குறிப்பாணையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியிட்டு,
நீதிமன்ற அலுவலக உதவியாளர் வசந்தி
அளித்துள்ள சமாதான விண்ணப்பத்தில்,
வருங்காலங்களில் இதுமாதிரியான புகார்கள்
வராமல் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்த இரு கடிதங்களின் நகல்களும்
வெளியாகியுள்ளன.
நாட்டில் சாதி, மதக்கொடுமைகளை விட அதிகார
வர்கத்தில் இருப்பவர்களின் ஆதிக்கம் தான்
அதிகரித்து வருகிறது.