Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, March 08, 2016

இது பெண்கள் நாட்டை ஆளும் காலம் - வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைக்காதே..!

‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?
என்று கேட்டவர்கள் இன்று பெண்களின்
முன்னேற்றம் கண்டு வாய்மூடி கிடக்கின்றனர்.
பெண்கள் உரிமைக்காக பல்வேறு தலைவர்கள்
போராடியுள்ளனர். தமிழகத்தில் பாரதியார்,
பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகளின்
முயற்சியால் பெண்ணினம் முன்னேறி
வருகிறது. இன்று பல்வேறு துறைகளிலும்
பெண்கள் சாதித்து வருகிறார்கள். அரசு பொது
தேர்வு ரிசல்ட் எளிய உதாரணம். பெண்கள்
முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும்
சாதனை மகளிரை கொண்டாடும் வகையிலும்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக
மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1789ம்
ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரம்,
சமத்துவம், பிரதிநிதித்துவம் ஆகிய
கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ்
தலைநகர் பாரிஸில் உள்ள பெண்கள்
போர்க்கொடி உயர்த்தினர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகள்
வழங்குதல், வேலைக்கேற்ற ஊதியம், 8 மணி
நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,
பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதில்
இருந்து விடுதலை பெறுவது ஆகிய
கோரிக்கைகளை முன்னிறுத்தி பெண்கள்
கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பாரிஸ் நகர
வீதிகளில் அணி திரண்டு கொட்டும்
மழையிலும் புயலாக புறப்பட்ட பெண்களை
அடக்க மன்னர் லூயிஸ் பிலிப் உத்தரவிட்டார்.
தடையை மீறினால் கைது செய்யப்படுவீர்கள்
என்று மிரட்டியது அரச நிர்வாகம். தடுக்க
வந்த பாதுகாவலர்கள் 2 பேர், ஆக்ரோஷத்தில்
இருந்த கூட்டத்தின் நடுவில் சிக்கி
இறந்தார்கள். மன்னர் அதிர்ந்தார்.
போராட்டத்தை அடக்க முடியாமல் அரச
பதவியை துறந்தார் லூயிஸ் பிலிப். இச்செய்தி
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் காட்டுத்தீயாக
பரவ.. அங்கும் கிளர்ச்சி. கிரீஸ், இத்தாலி
கிடுகிடுத்தன.
பிரான்ஸ் மன்னர் லூயிஸ் பிளாங்க், அரசவை
ஆலோசனை குழுவில் பெண்களை இடம்பெறச்
செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை
அளிக்கவும் ஒப்புக்கொண்டார். அந்த நாள்
1848ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி. அதை
நினைவுகூர்ந்தே மார்ச் 8ம் தேதி உலக
மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தொடர்
போராட்டங்களின் காரணமாக உலகின் பல
நாடுகளிலும் நிலக்கரி சுரங்கங்கள்,
தொழிற்சாலைகள், நிறுவனங்களில்
பெண்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆண்களுக்கு நிகரான சம்பளம்
கிடைக்கவில்லை. 1857ல் நியூயார்க் நகரில்
உழைக்கும் பெண்கள் ஒன்றுகூடி, இதை
கண்டித்து குரல் எழுப்பினர். அமெரிக்கா
முழுவதும் 1857ம் ஆண்டு மார்ச் 8ல்
போராட்டம் சூடுபிடித்தது. பெண்
தொழிலாளர்கள் 1907ல் மீண்டும் போராட்ட
களத்தில் குதித்து சம ஊதியம் கோரினர்.
இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள
கோபன்ஹேகன் நகரில் 1910ல் பெண்கள்
உரிமை மாநாடு நடந்தது.
மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம்
கொண்டாட வேண்டும் என்ற கருத்தை இந்த
மாநாட்டில் ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சி
தலைவர் கிளாரே செர்கினே முன்மொழிந்தார்.
பல தடங்கல் களால் இந்த தீர்மானம்
நிறைவேறவில்லை. 1920ல் ரஷ்யாவின்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த மகளிர்
போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த
அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா உலக மகளிர்
தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம்
தேதி கொண்டாட வேண்டும் என்று பிரகடனம்
செய்தார். 1921ம் ஆண்டு முதல் உலக மகளிர்
தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம்
இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று
பல்வேறு கட்சிகளும், மகளிர் அமைப்புகளும்
போராடி வருகின்றன. ‘பெண்களுக்கு முழு
சுதந்திரமும் சமத்துவமும் சம உரிமையும்
வழங்குவோம்’ என்ற உறுதி வீடுகளில்
இருந்து தொடங்கட்டும். சமூகத்திலும் இந்த
எண்ணம் பரவி, பாராளுமன்றம் வரை
செல்லட்டும்!
நன்றி-விவேகம் நியூஸ்