Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, March 08, 2016

இன்று சர்வதேச பெண்கள் தினம் ஒரு நாள் மட்டும் அல்லாமல், எந்த நாளும் பெண்மையை போற்ற வேண்டும்; மகளிர் கருத்து - தினத்தந்தி

ஒரு நாள் மட்டும் சர்வதேச பெண்கள் தினத்தை
கொண்டாடி விட்டு விட்டு விடாமல் எந்தநாளும்
பெண்மையை போற்ற வேண்டும் என்று மகளிர்
கூறியுள்ளனர்.மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும்
கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கான
உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.18–ம்
நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும்
அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றிய
சூழலில், 1857–ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள்,
தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிய
பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பெண்களால்
தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது
உலகுக்கு அந்த நாள் உணர்த்தியது.ஆணுக்கு நிகராக
பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில்
பெண்களுக்கு அநீதியே இழைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெண்களின் போராட்டக்களம்
தொடங்கியது. ஆண்களுக்கு இணையான ஊதியம்,
உரிமைகள் வழங்கக்கோரி 1857–ம் ஆண்டு மார்ச் 8–ம் தேதி
அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில்
இறங்கினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். 1907–ம் ஆண்டும்
சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட்டத்தை
தொடர்ந்தனர்.1910–ல் ஹேகனில் அனைத்துலக பெண்கள்
நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு
தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911–ம்
ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினம்
கொண்டாடப்பட்டது. இந்தக்கூட்டத்தில் தான், அரசன்
லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க
ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8–ந்தேதியை நினைவு
கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8–ம் நாளை
சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விடுமுறை அளிக்கும்
நாடுகள்
மார்ச் 25 1911–ம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு கட்டிடத்தில்
ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140–க்கும் மேற்பட்ட பெண்
தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த நிகழ்வே
அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வர மிக
முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள்
நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்க காரணமாக
அமைந்தது.1920–ம் ஆண்டு சோவியத் ரஷியாவில்
செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின்
போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷியாவின்
அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டு தோறும் மார்ச் 8–ம்
தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று
பிரகடனம் செய்தார். அதனை தொடர்ந்து 1921–ம் ஆண்டு
முதல் மார்ச் 8–ம் தேதி உலக மகளிர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது. 1975–ம் ஆண்டில் சர்வதேச
மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.ரஷியா,
உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம்,
ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ்,
புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா,
கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ,
தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில்
சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்பட்டு
வருகிறது.டாக்டர் ஸ்ரீநிஷாமாறன்
மகளிர் தினம் கொண்டாடப்படுவது குறித்து ஸ்ரீ பாலாஜி
மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைவர்
டாக்டர் ஸ்ரீநிஷா மாறன் கூறியதாவது:–ஒரு பெண் தன்
தாய்–தந்தையருக்கு நல்ல ‘மகள்’, மாமனார்–மாமியாருக்கு
பாசமான ‘மருமகள்’, கணவருக்கு அன்பான ‘மனைவி’,
குழந்தைகளுக்கான அன்பான ‘தாய்’, சொந்தபந்தங்களுக்கு
நல்ல ‘உறவுக்காரி’ என்று தனது குடும்பத்தில் மட்டுமே,
சர்க்கஸில் உள்ள ‘ஜக்ளர்’ எனப்படும் பல
பாட்டில்களையோ, பந்துகளையோ தூக்கி வீசிக்கொண்டே
ஒன்றையும் கீழே விழாமல் லாவகமாக பிடிக்கும்
‘வித்தைக்காரர்’ போல, யாருடைய அன்பும் குறைபடாமல்,
எல்லோருக்கும் தேவைகளையும் பூர்த்தி செய்யும்
பொறுப்பினை திறமையுடன் செய்ய வேண்டியவள்
ஆவாள்.வீட்டில் இவ்வளவு பொறுப்புகளை ஏற்று
செய்யும் அவள், வெளியே வேலைக்கு செல்லும்போது
கூடுதல் பொறுப்புகளை கவனிக்க நேரிடுகிறது.
இவ்வளவு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சுமந்து
தியாகத்தின் மொத்த உருவமாக திகழும் தாய்க்குலத்துக்கு
சமுதாயத்திலும், குடும்பத்திலும் உரிய அங்கீகாரம்
இல்லை என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.உலக
மகளிர் தினத்தை, இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாடி
விட்டுவிடாமல் எந்நாளும் பெண்களின் சேவைகளை
பெற்று அனுபவிக்கும் எல்லாரும் தினமும் போற்றி
புகழ்வது பெண்மைக்கு நாம் அளிக்கும் சிறந்த
பெருமையாகும். இவ்வளவு திறமையுள்ள பெண்களை
இன்னும் அடிமைகள் போல் கொள்ளாமல், ஆணுக்கு
சமமாக பாவித்து அனைத்து துறைகளிலும் இன்னும்
அதிக பங்கு அளிக்கவேண்டும்.இவ்வாறு அவர்
கூறினார்.ஆட்டோ சாந்தி
சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டி வரும் சாந்தி
(வயது 51) என்ற பெண் கூறியதாவது:–நான் கடந்த 11
ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். கடந்த
காலங்களில் பெண்களுக்கு எந்த சுதந்திரமும் இருந்தது
இல்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. குடும்பத்தில்
2 பேர் வேலைக்கு சென்றால் தான் குழந்தைகளுக்கு நல்ல
கல்வியை கொடுக்க முடியும் என்ற நிலை இருக்கிறது.
அதற்கேற்ப சமுதாயமும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
சமுதாயத்தின் பார்வையும் மாறியிருக்கிறது. நான்
எப்போதும் காலையில் எனது ஆட்டோவில் பள்ளி
குழந்தைகளை ஏற்றி அழைத்து செல்வதில் எனது முதல்
பணியை தொடங்குவேன்.எம்.ஜி.ஆர். நகர் மற்றும் அதனை
சுற்றியுள்ள பகுதிகளில் நான் ஆட்டோ ஓட்டுவேன்.
தினமும் நான் எதிர்கொள்ளும் மனிதர்களில் நல்லவர்களும்
இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள்.குடும்பத்தின்
பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு தான்
பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு உரிய
மரியாதை இந்த சமுதாயம் அளிக்கும்போது அன்பின்
இல்லமாக மாறுகிறது. நான் ஆட்டோ ஓட்டுவதற்கு என்
குடும்பத்தினர் 100 சதவீதம் ஒத்துழைப்பு
வழங்குகிறார்கள். இன்றைக்கு எனது மகன் பிளஸ்–2
தேர்வு எழுதுகிறான். மகள் கல்லூரியில் படிப்பை
மேற்கொண்டு வருகிறார்கள். பெண்களும் தைரியமாக
சமுதாயத்தை எதிர்கொள்ள வேண்டும். வெற்றி பெற
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஊழியர்
மோட்டார் ஆம்புலன்ஸ் பணியில் ஈடுபட்டு உயிர்களை
காப்பாற்றி வரும் இளம் பெண் ஊழியர் சந்தியா (23)
கூறியதாவது:–நான் நர்சிங் டிப்ளமோ படித்து
இருக்கிறேன். கடந்த 2013–ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ்
சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். இது
ஆத்மார்த்தமான பணி. கடந்த 2½ ஆண்டுகளாக நான்
பல்வேறு சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன். உயிருக்கு
போராடுகிறவர்களை காப்பாற்றுவதில் கிடைக்கிற மன
நிம்மதி வேறு எதிலும் கிடைப்பதில்லை. தற்போது முதல்–
அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னையில் 10
இடங்களில் மோட்டார் ஆம்புலன்ஸ் சேவையை
அறிமுகப்படுத்தினார்.10 பேரில் நான் மட்டும் தான் பெண்.
இதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக
உள்ளது. 108 அம்புலன்ஸ் வேனில் செல்லும் போது
என்னுடன் உதவிக்கு டிரைவரும் இருப்பார். ஆனால்
மோட்டார் ஆம்புலன்சில் நான் மட்டும் தான் செல்கிறேன்.
தனியாகவே எதையும் எதிர்கொள்கிறேன். இந்த திட்டத்தை
அறிமுகப்படுத்திய நாளில் இருந்து இதுவரை 65
அழைப்புகளை எதிர்கொண்டு, சேவை ஆற்றியிருக்கிறேன்.
ஆக்ஸிஜன் சிலிண்டர், மூச்சு திணறலை குறைக்கும்
உபகரணம், ஓ.ஆர்.எஸ்., குளுக்கோஸ் மற்றும் முதல்
உதவிக்குரிய அனைத்து பொருட்களும் அடங்கிய பேக்
என்னுடைய மோட்டார் சைக்கிள் பின்புறம்
பொருத்தப்பட்டுள்ளது. முகவரி தெரியாத இடங்களிலும்
கூட விசாரித்து சரியான நேரத்திற்குள் சென்று சேவை
ஆற்றியிருக்கிறேன். பெண்கள் அனைவரும் தங்கள்
திறமையை உணர்ந்து, சமுதாய பணியை ஆற்ற
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொழிலாளி
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகில் செருப்பு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கூலி
தொழிலாளி ஏகவள்ளி (42) கூறியதாவது:–அரும்பாக்கம்
முத்து மாரியம்மன் கோவில் தெருவில் நான் வசித்து
வருகிறேன். எனக்கு மகளிர் தினம் பற்றி தெரியாது.
என்னுடைய கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி
விட்டார். மூத்த மகன் கார்த்திக் கூலி தொழிலாளி. இளைய
மகள் சினேகாவுக்கு காது கேட்காது. மாற்று திறனாளி. 3–
ம் வகுப்பு படிக்கிறாள். கணவனை இழந்து, மாற்று
திறனாளியான மகளை படிக்க வைக்க வீட்டு
வேலைகளையும், கோவில்களில் செருப்பு பாதுகாப்பு
பணியிலும் ஈடுபட்டு வருகிறேன்.குறைந்த வருமானத்தில்
குடும்பம் நடத்துவதே எனக்கு மிகப்பெரிய போராட்டம்
தான். தைரியமும், தன்னம்பிக்கையும் தான் என்
போன்றவர்களை வாழ வைக்கிறது. என் போன்ற
பெண்களுக்காக அரசு வாழ்வாதார உதவிகளை செய்ய
வேண்டும். சிறு தொழில் தொடங்க உதவ வேண்டும்.
அப்போது தான் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற
முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி
சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் முதுகலை
ஆங்கில இலக்கியம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி
சே.கேத்தரின் கூறியதாவது:–பெண்கள் தாங்கள்
நினைப்பதை வெளிப்படையாக சொல்ல முடியும் என்ற
நிலை வந்துவிட்டது. பெண்களுக்கு உரிய உரிமைகள்
கிடைக்கவேண்டும் என்றால், அதனை
ஏற்றுக்கொள்ளக்கூடிய மன பக்குவத்தில் ஆண்கள்
இருக்கவேண்டும். தலைமை பணிகளில் பெண்கள்
இருந்தால், அதனை வேறுபடுத்தி பார்க்கும் நிலை
உள்ளது.இதேபோன்று பல்வேறு துறையிலும் பெண்கள்
குறைவாக இருப்பதால், பெண் என்று வேறுபடுத்தி
பார்க்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். கடந்த 50
வருடங்களில் பெண்களுக்கான முன்னேற்றத்தில்
மாற்றங்கள் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள்
தேவைப்படுகிறது. அந்த மாற்றங்கள் நிகழ இன்னும் 50
ஆண்டு காலம் ஆகும் என்று நான்
கருதுகிறேன்.ஆண்களுக்கு சமமாக பெண்கள்
மதிக்கப்படவேண்டும். சமூகத்தில் எல்லாவிதத்திலும்
உகந்த சூழல் இருப்பதாக உணரும்போது தான் பெண்கள்
முழு சுதந்திரம் அடைந்ததாக நான்
கருதுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.--–சென்னை
மட்டும் 36பாயிண்ட்

புட்நோட்
டாக்டர் ஸ்ரீநிஷாமாறன்--–சே.கேத்தரின்--–சந்தியா--–
ஏகவள்ளி--–சாந்தி--–