Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, March 25, 2016

இன்று பெரிய வெள்ளிக்கிழமை துக்க நாளாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்

ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட
நாளை, கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளிக்கிழமையாக
கடைப்பிடிக்கிறார்கள். இதையொட்டி தேவாலயங்களில்
சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. 40 நாள் உபவாசம்2
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசுநாதர், எருசலேமில்
பெத்லகேம் என்ற ஊரில் பிறந்தார். அவர் மக்களுக்கு
பல்வேறு ஆன்மிக கருத்துக்களை போதித்து வந்தார்.
போதனை செய்யத் தொடங்குவதற்கு முன்பு அவர் 40
நாட்கள் உபவாசம் இருந்தார்.ஆனால் அவரை பிடித்து,
பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி, மக்கள் ஒருமித்து
கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரை 2 கள்வர்களுக்கு
நடுவில் சிலுவையில் அறைந்து கொன்றனர். அவ்வாறு
கொல்லப்படுவதற்கு முன்பு ஏசுநாதருக்கு முள்கிரீடம்
சூட்டி, சிலுவையை சுமந்தபடி வழிநெடுக நடக்கச்
செய்து, கொல்கதா மலை உச்சிக்கு சென்ற பிறகு அங்கு
அவரை ஆணியால் அடித்து சிலுவையில்
தொங்கவிட்டனர்.3 மணி நேர ஆராதனைஏசுநாதர் 3 மணி
நேரம் சிலுவையில் தொங்கியபோது 7 வசனங்களை பேசி,
அதன் பின் உயிரைவிட்டார் என்று பைபிளில்
கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் லெந்து காலம் என்ற
நாட்களை நிர்ணயித்து அந்த நாட்களில் ஏசுநாதரின்
சிலுவைப்பாடு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து
வருகின்றனர்.அதன்படி, லெந்து காலத்தில் 40 நாட்கள்
கிறிஸ்தவர்கள் உபவாசம் இருக்கின்றனர். லெந்து கால
இறுதியில் வரும் புனித வெள்ளிக்கிழமையில் (பெரிய
வெள்ளிக்கிழமையில்) ஏசுநாதர் சிலுவையில்
பட்டபாடுகளை நினைவுகூரும் வகையில், துக்க நாள்
கடைபிடித்து, தேவாலயங்களில் 3 மணி நேரம் சிறப்பு
ஆராதனை நடத்தப்படுகிறது.7 வசன பிரசங்கம்அந்த
வகையில் தேவாலயங்களில் புனித வெள்ளிக்கிழமையான
இன்று காலை 11.30 மணிக்கு மும்மணி நேர தியான
ஆராதனை தொடங்குகிறது. 3 மணி நேரம் நீடிக்கிற அந்த
சிறப்பு ஆராதனையில் ஏசுநாதர் சிலுவையில் கூறிய 7
வசனங்களின் அடிப்படையில் சபை பாதிரியார்கள்,
மூப்பர்கள் பிரசங்கம் செய்வார்கள். துக்க பாடல்களை சபை
மக்கள் பாடுவார்கள்.சில தேவாலயங்களில் சபை மக்கள்,
சிலுவைக்காட்சியை நடித்துக்காட்டுவதும்
உண்டு.உயிர்த்தெழுந்த பண்டிகைபுனித
வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறைந்து
கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட ஏசுநாதர், 3-ம்
நாளில் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை
அந்த நாள் மகிழ்ச்சித்திருநாள். அதை ஈஸ்டர் பண்டிகையாக
கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். அந்த
நாளிலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கும்.
கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் இருந்த உபவாசத்தை முடித்துக்
கொண்டு, அன்று அசைவ விருந்து சாப்பிடுவார்கள்.
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும்,
இனிப்புகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.