Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, March 25, 2016

‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களின் தேர்வு பட்டியலில் மோடிக்கு இடம் சானியா, பிரியங்கா சோப்ராவுக்கும் வாய்ப்பு

உலக அளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’
பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வு பட்டியலில் பிரதமர்
மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்
பிடித்துள்ளனர்.
‘டைம்’ பத்திரிகை
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘டைம்’
வாரப்பத்திரிகை, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100
பேரின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு
வருகிறது. இந்த பட்டியலில் இடம் பிடிப்பதை புகழ்
மிக்கதாக அனைவரும் கருதுகின்றனர்.
இந்த பத்திரிகை கடந்த ஆண்டு வெளியிட்ட 100 பேர்
பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம்
பெற்றிருந்தது. அதில் மோடியின் சுய விவரங்களை
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதியிருந்தது
அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
விளாடிமிர் புதின்
அதன்படி இந்த ஆண்டுக் கான பட்டியலை ‘டைம்’
பத்திரிகை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதற்காக
127 பேர் அடங்கிய உத்தேச பட்டியலை அறிவித்து
உள்ளது. இதில் உலக தலைவர்கள், சிந்தனையாளர்கள்,
விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்
பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஜெர்மனி அதிபர்
ஏஞ்சலா மெர்க்கல், போப் பிரான்சிஸ், பேஸ்புக் தலைமை
செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க், மியான்மர் ஜனநாயக
தலைவர் ஆங்சான் சூகி, உசேன் போல்ட் உள்ளிட்ட
பிரபலங்கள் இதில் இடம் பிடித்துள்ளனர்.
மோடியின் குரல் சக்தி வாய்ந்தது
இந்த பட்டியலில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர
மோடியின் பெயர் மீண்டும் இடம் பெற்றுள்ளது. மேலும்
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாலிவுட் நடிகை
பிரியங்கா சோப்ரா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
பிரதமர் மோடியை குறித்து அந்த பத்திரிகை கூறுகையில்,
‘உலக மேடையில் மோடியின் குரல் இன்னும் சக்தி
வாய்ந்ததாக ஒலிக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில்
அவரது நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது’ என
செய்தி வெளியிட்டு உள்ளது.
மிகச்சிறந்த வீராங்கனை
சானியா மிர்சா பற்றி குறிப்பிடுகையில், ‘இந்தியாவின்
மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனையான இவர், டென்னிஸ்
இரட்டையர் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்
மூலம் தனது தாய்நாட்டில் பல பெண் வீராங்கனைகளுக்கு
முன்மாதிரியாக விளங்குகிறார்’ என்று கூறியுள்ளது.
இதைப்போல பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும்
நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா,
‘குவாண்டிகோ’ சீரியலில் நடித்ததன் மூலம்
ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளதாக, நடிகை
பிரியங்கா சோப்ராவை குறித்து கூறப்பட்டு உள்ளது.
ஓட்டு மூலம் தேர்வு
இவர்களை தவிர வெளிநாடு வாழ் இந்திய பிரபலங்களான
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,
மைக்ரோசாப்ட் நிர்வாகி சத்யா நாதெல்லா மற்றும் இந்திய
வம்சாவளி நடிகர் ஆசிஷ் அன்சாரி ஆகியோரின் பெயரும்
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்த 127 பேரில் இருந்து சிறந்த 100 பேரை தேர்ந்தெடுக்க
டைம் பத்திரிகையின் வாசகர்கள் ஓட்டளிப்பார்கள். அதன்
அடிப்படையில்செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பெயர்களை
பத்திரிகைநிர்வாகம் முடிவு செய்து அடுத்த மாதம்
வெளியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.