Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 12, 2016

ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் சட்டம் நிறைவேறியது

புதுடில்லி:அரசின் மானியங்களைப் பெற, 'ஆதார்'
அட்டையை கட்டாயமாக்கும் சட்டம், லோக்சபாவில்
நேற்று நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் நிதி, பிற மானிய பலன்கள் மற்றும்
சேவைகள், உரியவர்களைச் சென்றடைவதை உறுதி
செய்யும் வகையில், 'ஆதார்' அட்டையை
கட்டாயமாக்கும் சட்ட மசோதா - 2016, லோக்சபாவில்
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, நிதி
மசோதாவாக நேற்று விவாதத்துக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது. 'இந்த மசோதாவை, நிலைக்குழு
ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என, காங்கிரஸ்,
அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
ஆட்சேபம் தெரிவித்தன. அதை மீறி, மசோதா
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
பேசியதாவது:முந்தைய ஐ.மு., கூட்டணி அரசு, 2010ல்,
ஆதார் அட்டை தொடர்பான சட்டத்துக்கு ஒப்புதல்
அளித்தது. இந்த மசோதா பற்றி நிலைக்குழுவில்
ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு, பொதுமக்களின்
கருத்துக்களும் பெறப்பட்டன.
இந்த சட்டம், அரசின் பயன்கள், உரியவரைச்
சென்றடையச் செய்வதுடன், அரசுக்கு சேமிப்பையும்
தரும். சமையல் காஸ் மானியத்தை, ஆதார் எண்ணுடன்
இணைத்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில்
செலுத்துவதால், அரசுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய்
சேமிப்பு கிடைத்துள்ளது.இதுதவிர, நான்கு
மாநிலங்களில் ரேஷன் மானியமும் ஆதாருடன்
இணைக்கப்பட்டதால், அந்த மாநில அரசுகள், 2,300 கோடி
ரூபாயை சேமித்துள்ளன; அதனால்,இந்த மசோதாவை
நிறைவேற்ற வேண்டும்.தனியுரிமை பேணப்படும்ஆதார்
புள்ளி விவரங்கள், சம்பந்தப்பட்டவர்களின்
ஒப்புதல் இல்லாமல், எவருக்கும் பகிர்ந்து கொள்ளப்பட
மாட்டாது; உடற்கூறு அடையாள விவரங்களும் பகிர்ந்து
கொள்ளப்பட மாட்டாது.நாட்டில், 97 சதவீத வயது
வந்தவர்களும், 67 சதவீத மைனர்களும் ஆதார் அட்டை
வைத்துள்ளனர். தினசரி, 5 முதல் 7 லட்சம் பேர், ஆதார்
அட்டை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி.,க்களின் விவாதத்துக்குப் பின், அமைச்சர் ஜெட்லி,
பதிலளித்து பேசினார். இதையடுத்து, ஆதார் மசோதா,
நிதி மசோதாவாக குரல் ஓட்டெடுப்பு மூலம்
நிறைவேற்றப்பட்டது.
வரிகளை விதிப்பது, ரத்து செய்வது,
ஒழுங்குபடுத்துவது, அரசின் தொகுப்பு நிதி, அவசர
கால நிதியில் இருந்து கடன் பெறுவதற்காக பண
மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த
மசோதாக்கள், லோக்சபாவில்மட்டுமே
நிறைவேற்றப்படும். லோக்சபாவில்
நிறைவேற்றப்பட்டுவிட்டால் அதை நிராகரிக்கவோ,
திருத்தம் செய்யவோ, ராஜ்யசபாவுக்கு அதிகாரம்
இல்லை.லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட பின் இந்த
மசோதா, ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 14
நாட்களுக்குள் பரிந்துரை அளிக்கும்படி கேட்கப்படும்.
அந்த கால அவகாசத்துக்குள் ராஜ்யசபாவில் இருந்து
மசோதா திரும்பி வரவில்லை என்றால், மசோதா
நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். ஆதார் அட்டையை
கட்டாயமாக்கும் சட்டத்தைப் பொறுத்தவரை,
ராஜ்யசபாவில்ஆளும் தே.ஜ., கூட்டணிக்கு
பெரும்பான்மை இல்லாததால், இதை பண மசோதாவாக
அறிமுகம் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டியுள்ளன.
ஆதார் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 99 கோடி
மக்களின் உடற்கூறு விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் நேற்று, தகவல் தொழில்நுட்பத் துறை
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இதுபற்றி மேலும்
கூறுகையில், ''தனிநபர் உரிமையைப் பற்றி எந்த
கவலையும் கொள்ளத் தேவையில்லை.
சேகரிக்கப்பட்டுள்ள விவரங்கள், பெங்களூரு உள்ளிட்ட
நகரங்களில் தொகுக்கப்பட்டு வருகின்றன. ஆதார்
அட்டையுடன் இணைப்பது தொடர்பாக, அமெரிக்க
நிறுவனம் எதனுடனும் எந்த ஒப்பந்தமும் செய்து
கொள்ளப்படவில்லை,'' என்றார்.