12-் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில்
வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர்
வசுந்தராதேவி தகவல் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு
பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ்
தொடங்கியது. தமிழகம் முழுவதும் 74 மையங்களில்
விடைத்தாள்கள் திருத்தும் பணி நடப்பதாக அரசு
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு
தேர்வுகள், வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
12ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள்
எழுதுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரியில் 2421 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.