Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 12, 2016

இராணுவ வீரர்களுக்கு செல்போன்

புதுடில்லி;''சர்வதேச எல்லையிலும், நக்சல்கள் பாதிப்பு
நிறைந்த பகுதிகளிலும் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, விரைவில்,
'மொபைல் போன்'கள் வழங்கப்படும்,'' என, மத்திய
உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய்
சவுத்ரி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று, 'அசோசம்' ஏற்பாடு செய்திருந்த,
சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாட்டை துவக்கி வைத்து,
அவர் பேசியதாவது:இன்றைக்கு நம் ராணுவ வீரர்களிடம்
மொபைல் போன் இல்லை என்று தெரிந்தால் நீங்கள்
ஆச்சர்யப்படுவீர்கள். எல்லையிலும், நக்சல் பாதிப்பு
பகுதிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ள அவர்களுக்கு,
'3ஜி' மொபைல் போன்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
குடும்பத்தினருடன் அவர்கள் அடிக்கடி பேசிக்
கொள்வதற்காகவழங்கப்படும் இந்த மொபைல் போன்கள்,
மற்றவர்கள் இடைமறித்து தகவல்களைப் பெற முடியாத
வகையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவையாக
இருக்கும்.
இது சம்பந்தமாக, அமெரிக்க கம்பெனியுடன் பேச்சு
நடத்தியுள்ளேன். பெட்டி ஒன்றில் தொலைத்தொடர்பு
இணைப்பகத்துடன், இந்த மொபைல் போனை வழங்க,
அந்த நிறுவனம் முன்வந்துள்ளது. வீரர்கள் எங்கு
செல்வதாக இருந்தாலும், அந்த பெட்டியை எடுத்துச்
செல்லலாம்.இவ்வாறு அவர் பேசினார்.