Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Saturday, March 05, 2016

பள்ளிகளுக்கான பாடநூல்; ஆன்லைனில் பெறும் வசதி

ஈரோடு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்
கழகம், மாணவர்களுக்கு தேவையான, 1 முதல், பிளஸ் 2
வரையிலான பாடநூல்களை இணைய வழி
(www.textbookcorp.in) மூலம் ஆன்லைன் விற்பனை
செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இதன் மூலம்
பயன்பெறுகின்றனர். இணைய வழியில் பணம் செலுத்த
இயலாததால், பாடநூல் பெற முடியாத மாணவர்களுக்கு,
எளிதில் பாடநூல்கள் கிடைக்க, வட்ட அளவில்
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் நடத்தும்
பொது சேவை மையம் மூலம் பாடநூல்களை பணம்
செலுத்தி பெறலாம். இச்சேவை மையம் குறித்த
விவரங்கள், www.textbookcorp.in மூலம் அறியலாம்.
பாடநூல்களின் விவரம், விலை போன்றவைகளை
அறியலாம். சேவை மையத்தை அணுகி, தேவையான
பாடநூல்களை பணம் அல்லது கூரியர் கட்டணத்துடன்
செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான ரசீது
வழங்கப்படும். கூடுதல் கட்டணம் வழங்க
தேவையில்லை.
அவ்வாறு பணம் செலுத்தியவர்களுக்கு, அவர்களது
வீட்டுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்
கழக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.