Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 03, 2016

'டெபிட் கார்டு' மூலம் வரி செலுத்த வசதி

சென்னை மாநகராட்சி வரிகளை, டெபிட்
கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும்
வசதி, இ - சேவை மையங்களில் ஏற்படுத்தப்பட்டு
உள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி'
நிறுவனம் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன்
வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகராட்சி
தலைமையிடம், அனைத்து மண்டல அலுவலகங்கள்,
அனைத்து பகுதி அலுவலகங்கள், கோட்ட
அலுவலகங்கள் ஆகியவற்றில், அரசு இ - சேவை
மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.அவற்றில் சொத்து
வரி, தொழில் வரி, நிறுவன வரி ஆகியவற்றை
வரைவோலையாகவோ, காசோலையாகவோ செலுத்தும்
வசதி நடைமுறையில் உள்ளது. இதை பயன்படுத்தி, 1.18
லட்சம் பேர், பல்வேறு வரிகளை செலுத்தி உள்ளனர்.
இதுவரை, 54 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு
உள்ளது. வசதியை மேம்படுத்தும் விதமாக, டெபிட்
கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாகவும், வரி
செலுத்தும் வசதி, தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கென பிரத்யேக கருவிகள், அனைத்து இ - சேவை
மையங்களிலும் பொருத்தப்பட்டு உள்ளன.டெபிட் கார்டு
மூலம் வரி செலுத்தும்போது, அதற்கென தனியே
சேவை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. அனைத்து
வங்கிகளுடைய, டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம்.
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது, 15 சதவீதம்
சேவைக் கட்டணம் மற்றும் அதற்குரிய சேவை வரி
வசூலிக்கப்படும்.பொதுமக்கள், இச்சேவையை
பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்து
உள்ளார்.