Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Friday, March 04, 2016

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது: காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம்

்பிளஸ்-2 தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தேர்வில்
காப்பி அடிப்பதை கண்காணிக்க 4 ஆயிரம் பறக்கும்
படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கீன
செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான
தண்டனை வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று
(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இத்தேர்வு
ஏப்ரல் 1-ந்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம்-
புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550
பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ-
மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என
மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர்
தேர்வு எழுதவுள்ளனர். புதுச்சேரியில் 35 தேர்வு
மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337
மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம்
மற்றும் புதுச்சேரி முழுவதும் தேர்வுக்காக மொத்தம் 2
ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர்
பிளஸ்-2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106
சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும்
புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில்
தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த ஆண்டு முதன்முறையாக ‘ஹால் டிக்கெட்’டில்
சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. இதன்மூலம்
தேர்வுக்கு முன்பே தேவையான அறிவுரைகளை
தெரிந்துகொள்ளலாம்.
பிளஸ்-2 தேர்வில் ‘காப்பி’ அடிப்பதை கண்காணிப்பதற்கு
தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள்
மற்றும் நிலையான படை நியமனம்
செய்யப்பட்டிருக்கிறது. செல்போனுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
‘பிட்’ அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக
நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல்
மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன
செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான
தண்டனைகள் வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.