Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 03, 2016

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது: 8 லட்சத்து 82 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை)
தொடங்குகிறது. ஏப்ரல் 1-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில்
இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் தேர்வு
எழுதுகிறார்கள்.
இந்த வருடமும் மாணவிகள்தான் அதிகம் பேர்
எழுதுகிறார்கள். மாணவிகள் 4,47,891 பேர்களும்,
மாணவர்கள் 3,91,806 பேர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளிக்கூட மாணவர்களை தவிர 42,347
தனித்தேர்வர்களும் பிளஸ்-2 தேர்வை எழுத உள்ளனர்.
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு
மையங்களில் 135 பள்ளிகளை சேர்ந்த 14,337 மாணவ-
மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி முழுவதுமாக பிளஸ்-2 தேர்வுக்கு 2,421
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறைவாசிகள் 97 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.
இவர்கள் புழல் சிறையில் எழுத இருக்கிறார்கள்.
தமிழ்வழியில் படித்து தேர்வு எழுதும் பள்ளிக்கூட
மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. இந்த
வருடம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் தமிழில் தேர்வு
எழுதுகிறார்கள்.
பிளஸ்-2 தேர்வுக்கு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட
மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்,
வாய் பேசாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர்
நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் 1
மணிநேரம்) 1,850 மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
தேர்வை சிறப்பாக நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள்
தலைமையில் மாவட்ட தேர்வு குழு
அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த
இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள்
ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு
சென்று தேர்வுக்கான முன் பணிகளை
செய்துவருகிறார்கள்.
அனைத்து மாவட்டங்களிலும், மாணவர்கள்
காப்பியடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட
பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போனை
எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் செல்போனை கண்டிப்பாக கொண்டு
செல்லக்கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால்
செல்போன்களை பராமரிப்பதற்கு தேர்வுமையங்கள்
பொறுப்பேற்காது. தேர்வு பணியில் ஈடுபடும்
ஆசிரியர்களும் செல்போன்களை கொண்டுசெல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவுரையை மீறி மாணவர்களோ, ஆசிரியர்களோ
செல்போன் அல்லது இதர தகவல் தொடர்பு சாதனங்களை
வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
தேர்வு நேரங்களில் துண்டு தாள் வைத்திருத்தல், பார்த்து
எழுதுதல், ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீன
செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை
வழங்கப்படும். அதிகபட்சமாக 2 வருடம் வழங்கப்படும்
என்றும் தெரிவித்துள்ளது.
ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, அல்லது
அவர்களை ஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம்
முயற்சி செய்தால் அந்த பள்ளிக்கூட தேர்வு மையத்தை
ரத்து செய்தும் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை
பள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது மெட்ரிகுலேசன் பள்ளி
இயக்குனர் ரத்து செய்வார்கள்.