பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய
பட்ஜெட்டில் கிராமப் புற ஏழைப்பெண்களுக்கு இலவச
கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை நிதி மந்திரி
அருண் ஜெட்லி அறிவித்தார்.
இந்த திட்டத்திற்கு ’ரதான் மந்திரி உஜ்வாலா யோஜ்னா’என
பெயரிடப் பட்டது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரி
சபைகூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.8,000
கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்
பட்டது.இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில்
வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு
கிடைக்கும்.