Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Thursday, March 10, 2016

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? 1950 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புங்கள்

வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா?
இல்லையா? என்பதை அறிந்துகொள்ள 1950 என்ற
எண்ணில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு
செய்து எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) அனுப்பினால்,
அனுப்பப்படும் செல்போன் எண்ணுக்கு தேர்தல்
ஆணையத்தின் சார்பில் பதில் எஸ்.எம்.எஸ். வரும்.
அதில், வாக்காளர் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம்
போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று தங்கள் வாக்கு
மையத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை
அறிந்து, நெரிசல் இன்றி வாக்குப்பதிவு செய்யவும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, 1950 என்ற எண்ணில் ‘கியூ’ என்று பதிவு
செய்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணை
குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அனுப்பப்படும்
செல்போன் எண்ணுக்கு வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு
செய்ய இவ்வளவு பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்று
உடனடியாக பதில் குறுந்தகவல் வரும்.