Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, February 24, 2016

தமிழக அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ தரத்திலான பாடத்திட்டம் கொண்டுவருவது அவசியம்: ஹெச். ராஜா

தமிழக அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ தரத்திலான
பாடத்திட்டம் கொண்டுவருவது அவசியம் என்று பாஜக
தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை
செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிப்
பொறுப்பாளர்கள் கூட்டம் புதன்கிழமையுடன்
முழுமையாக நிறைவுபெறுகிறது. சமச்சீர் கல்வி
இருக்கின்ற தமிழக அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ
தரத்திலான பாடத் திட்டங்களை கொண்டுவருவது
அவசியம்.
அகில இந்திய அளவில் நமது மாணவர்கள் போட்டியிடுகிற
வகையில் இன்னொரு மொழியை கற்பதால் தமிழுக்கு
எந்தவித ஆபத்தும் இல்லை. மக்கள் சமஸ்கிருதத்தை
விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கலாம். கட்டாயமில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமற்றது. சிவகங்கை
மாவட்ட மக்கள் பயன்பெற்றுவரும் சிலம்பு விரைவு
ரயிலை தினமும் இயக்குவதற்கு ரயில்வே
அமைச்சகத்திடம் தெரிவித்து நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றார்.