Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, February 24, 2016

பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் செவிலியர்கள் 2– வது நாளாக உண்ணாவிரதம்

்அரசு தொகுப்பூதிய செவிலியர்களாக தங்களை
மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பச்சிளம்
குழந்தைகளை பராமரிக்கும் செவிலியர்கள் நேற்று
முன்தினம் முதல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
டி.எம்.எஸ். வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை
மேற்கொண்டு வருகின்றனர்.2–வது நாளாக நேற்றும்
உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த
உண்ணாவிரத போராட்டத்தில் பச்சிளம் குழந்தைகளை
பராமரிக்கும் செவிலியர்கள் 445 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8, 9 மற்றும் 10
ஆகிய தேதிகளில் போராட்டத்தை
நடத்தினார்கள்.இதுகுறித்து பச்சிளம் குழந்தைகளை
பராமரிக்கும் செவிலியர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
எங்களை அரசு தொகுப்பூதிய செவிலியர்களாக மாற்ற
வேண்டும். நாங்கள் இதுவரை செய்துள்ள பணி நாட்களை,
அரசு தொகுப்பூதிய செவிலியர் பணி நாட்களாக கணக்கில்
கொள்ள வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி,
கடந்த 8, 9 மற்றும் 10–ந் தேதிகளில் போராட்டம்
நடத்தினோம். அப்போது அமைச்சர்கள், அதிகாரிகள்
எங்களிடம் வாய்மொழியாக கோரிக்கை நிறைவேற்றப்படும்
என்று தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.நாங்கள் பணியில் சேர்ந்த
பிறகே இந்த இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது.
எங்களுக்கு அரசு நினைத்தால் இந்த உதவியை செய்ய
முடியும். எங்கள் கோரிக்கைகளை முதல்–அமைச்சர்
ஜெயலலிதா, பரிவோடு ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர்
கூறினார்.