Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Monday, February 22, 2016

பொதுத் தேர்வு: மாணவர்களின் நலனுக்காக தடையில்லா மின்சாரம்

்10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி,
தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின்
உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர்
கோவிந்தராஜு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி கோட்டத்தில் முன்பருவ கால பராமரிப்பு, 12
மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கவனத்தில்
கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக
பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 22-ஆம் தேதி மணவரானப்பள்ளி,
கங்கோஜிகொத்தூர், எட்ரப்பள்ளி, ஆவல்நத்தம்,
கே.என்.பள்ளி,
சின்னகொத்தூர், நாச்சிகுப்பம், உலகம், உல்லட்டி,
ஏனுசோனை, ஒசள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள
கிராமங்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி
வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பிப்.23-
ஆம் தேதி கெட்டூர், கீழ்மொரசிபட்டி, மேல்மொரசிப்பட்டி,
அஞ்சாலம், ராமாபுரம், ஆலமரத்துப்பட்டி, பதிமடுகு,
தீர்த்தம், நல்லூர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
24-ஆம் தேதி குப்பச்சிப்பறை, மாரசந்திரம், குருபரப்பள்ளி,
காளிங்காவரம், கோடிப்பள்ளி, சூலாமலை மற்றும்
அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம்
நிறுத்தப்படும்.
வரும் 25-ஆம் தேதி காளிங்காவரம், பஸ்தலப்பள்ளி,
செம்பரசனப்பள்ளி, சிம்பல்திராடி, வேப்பனஅள்ளி,
பூதிமுட்லு, கே.கொத்தூர், கொங்கனப்பள்ளி,
சிகரமானப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள
கிராமங்களிலும், 26, 27 ஆகிய தேதிகளில் பி.ஏ.துர்கம்,
சாமல்பள்ளம், பீர்பள்ளி, மேலுமலை, மல்லசந்திரம்,
பிக்கனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள
கிராமங்களிலும், 29-ஆம் தேதி சூளகிரி, வேம்பள்ளி,
போரிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்