Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Wednesday, February 17, 2016

சுங்கக் கட்டண முறையில் மாற்றம்

மின்னணு சுங்க கட்டண முறை விரைவில்
அமலுக்கு வரும் என மத்திய தரைவழி போக்குவரத்து
துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் 'மேக் இன் இந்தியா' திட்ட
வாரவிழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின்
கட்காரி தெரிவித்ததாவது: சுங்கச்சாவடிகளில்
வாகனங்கள் வரிசையாக நின்று கட்டணம் செலுத்தும்
முறை முடிவுக்கு வர உள்ளது. 360 சுங்கச்சாவடிகளில்
வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மின்னணு சுங்க கட்டண
முறை நடைமுறைக்கு வர உள்ளது. இந்த
எண்ணிக்கையானது பின் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
இதற்காக இரு வங்கிகளுடன் ஒப்பந்தம்
போடப்பட்டுள்ளது.
தற்போது 96 ஆயிரம் கி.மீ., ஆக உள்ள தேசிய
நெடுஞ்சாலையின் துாரத்தை, அடுத்த 3 மாதத்திற்குள்
1.52 லட்சம் கி.மீ., உயர்த்த மத்திய அரசு இலக்கு
நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.