Flash news..

கல்வித் துறை தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெற அருகிலுள்ள contact formல் உங்கள் பெயர்,மின்னஞ்சல் முகவரி,பள்ளி முகவரி, செல்லிடைப் பேசி எண்ணை பதிவு செய்யவும். +2 தமிழ் வழி அனைத்துப் பாடங்களுக்குமான study materials பெற study materials என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

Tuesday, February 23, 2016

மொபைலில் மாணவியர் பேசினால் அபராதம்

ஆமதாபாத்:பள்ளி மாணவியர், மொபைல் போன்
பயன்படுத்த, குஜராத் மாநில கிராமம் ஒன்றில் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென் படேல்
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த
மாநிலத்துக்குட்பட்ட மெக்சானா மாவட்டம், சூரஜ்
கிராமத்தில், பள்ளி மாணவியர், மொபைல் போன்
பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டில்
மட்டுமே, பெற்றோரின் மொபைல் போனில் பேசலாம்
என்றும், வீட்டுக்கு வெளியில், மொபைல் போனில்
பேசும், 18 வயதுக்குட்பட்ட மாணவியருக்கு, 2,100
ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பஞ்சாயத்து
அறிவித்துள்ளது.